Wednesday 15 August 2012

இலவச செல்போன் வழங்க மன்மோகன் அரசு திட்டம்..


ஆங்கிலேயர் தெற்காசியாவில் தேயிலையை அறிமுகப்படுத்துவதற்காக, லீட்டர் லீட்டராக ஓசி தேநீர் கொடுத்தார்களாம்…! ஒசியில் குடித்து குடித்து சுவைக்கு அடிமையான மக்கள் ஓசி திட்டம் முடிந்ததும் காசு கொடுத்து தேனீர் வாங்கி குடித்தார்களாம்..!

தற்போது மத்திய அரசு அறிவிக்க இருக்கும் ஓசி செல்போன் திட்டத்திலும் இவ்வாறான மாயவலை பின்னப்பட்டுள்ளதோ என சந்தேகம் வலுக்கிறது.

நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த சுமார் 3 கோடி பேருக்கு ரூ.7 ஆயிரம் கோடியில் இலவச செல்போன் வழங்க மத்திய அரசு திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

மாதம் 200 லோக்கல் கால்களையும் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய திட்டக் கமிஷன் மற்றும் தொலைதொடர்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் 15,ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங், தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றுகிறார்.

அப்போது இந்த புதிய திட்டம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments: