Thursday 16 August 2012

அஸ்ஸாம் கலவரம் மறைக்கப்படும் உண்மைகள்...!!!


பகிர்வு : இன்று ஒரு தகவல் (பக்கம்)

கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் அஸ்ஸாமில் முஸ்லிம்களின் மீதான தாக்குதல் கொடூரமாக நடந்து வருகின்றது. போடா லேண்ட் பகுதியிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியே தீருவோம் என திட்டமிட்டு முஸ்லிம்களை கொன்றொழித்துக் கொண்டிருக்கின்றனர், தனி நாடு
கேட்டு ஆயுதம் ஏந்தி போராடும் போடோ தீவிரவாதிகள். இதுவரை பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். போடோ தீவிரவாதிகளின் இந்த வெறிச்செயலை வேடிக்கை பார்க்கின்றது மத்திய, மாநில அரசுகள். இவர்களின் இந்த தீவிரவாதத் தாக்குதல் ஒடுக்கப்படவில்லை என்றால் போடோ லேண்ட் பகுதில் வசிக்கும் லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்

கலவரத்தின் பின்னணி :

போடோ லேண்ட் சிறுபான்மை மாணவர் பேரவையின் தலைவர் முஹிப்புல் இஸ்லாம் மற்றும் அஸ்ஸாம் சிறுபான்மை மாணவர் பேரவையைச் சேர்ந்த அப்துல் சித்தீக் சேக் ஆகியோர் போடோ தீவிரவாதிகளால் ஜூலை 20 அன்று கொல்லப்படுகின்றனர். இந்த போடோ தீவிரவாதிகள்தான் முஸ்லிம்களைக் கொலை செய்து கலவரத்திற்கு வித்திட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக போடோ தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் மறுநாள் கொல்லப்படுகின்றனர். இதனால் இரு சமூகங்களுக்கிடையே பயங்கர கலவரம் ஏற்படுகின்றது.
போடா லேண்ட் பகுதியின் கொக்ரஜ்ஹர், சிராங், பக்ஸா மாவட்டத்திலும் மற்றும் துப்ரி மாவட்டத்திலும் கலவரம் காட்டுத்தீ போல் பரவுகின்றது. இதுவரை இந்த கலவரத்திற்கு 58க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

1,70,000 பேர் தங்களுடைய இருப்பிடங்களை விட்டுவிட்டு அகதிகளாக அண்டை மாவட்டங்களிலும், அண்டை மாநிலமான மேற்கு வங்கத்திலும் குடிபெயர்ந்துள்ளனர்.

யார் இந்த போடோ தீவிரவாதிகள்?

போடோ லிப்ரேஷன் டைகர் போர்ஸ் (Bodo Liberation Tigers Force) என்று அழைக்கப்படும் இந்த போடோ தீவிரவாதிகள் அஸ்ஸாமில் உள்ள போடோ லேண்ட் பகுதியை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என போராடக்கூடிய தீவிரவாத குழு ஆவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்.

AK 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் என தனி போர்ப்படையை வைத்துக் கொண்டு இந்திய அரசிற்கு சவால்விடும் வகையில் அஸ்ஸாமின் போடோ லேண்ட் பகுதியில் தனி இராஜ்யம் நடத்திக் கொண்டிருப் பவர்கள்தான் இந்த போடோ தீவிரவாதிகள். இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் இவர்களைப் பொருத்தவரை தீவிரவாதிகள். சற்றும் யோசிக்காமல் கொன்று குவித்துவிடுவார்கள்.
மொண்டல் என்பவர் கோக்ராஜ்ஹர் பகுதியில் பல இடங்களுக்கு உரிமையாளர். முஸ்லிம்களுக்கு எதிரான போடோ தீவிரவாதிகளின் தாக்குதலைப் பற்றி மொண்டல் குறிப்பிடுகையில், “கடந்த 20 ஆண்டுகளில் போடோ தீவிரவாதிகள் இதுபோன்ற ஒரு தாக்குதலை நடத்தியதில்லை. அந்த அளவிற்கு கொடூரமாக முஸ்லிம்கள் மீது இந்த போடோ தீவிரவாதிகள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்றார்.

இந்தக் கலவரத்தில் போடோ தீவிரவாதிகளிடமிருந்து தனது சகோதரரை மயிரிழையில் காப்பாற்றிய மொய்னுல் ஹக் என்பவர் கூறுகையில்…

இந்த போடோ தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் 1987-ல் இருந்து நடந்து வருகின்றது. இவர்களின் நோக்கம் தனி நாடு. போடோ இனத்தைத் தவிர பிற இன மக்களை போடோ லேண்ட் பகுதியிலிருந்து துரத்துவதுதான் இவர்களின் குறிக்கோள். இந்தப் பகுதியில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள். எனவே இவர்களின் தனி நாடு கோரிக்கைக்கு இடையூறாக இருக்கும் முஸ்லிம்களைக் கொல்வதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

ராணுவ வேடத்தில் வந்து மசூதி இல் தாக்குதல் நடத்திய போடோ தீவிரவாதிகள் !

கொக்ராஜர்:அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகள் கொக்ராஜர் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். முஸ்லிம்கள் தராவீஹ் (இரவு) தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது ராணுவ உடையில் துப்பாக்கிகளுடன் வந்த போடோ தீவிரவாதிகள் மசூதி க்கு காவல் நின்றவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். எந்த நிமிடமும் போடோக்கள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கையுடன்
மசூதி க்கு காவலுக்கு ஆட்களை நிறுத்திவிட்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர். அப்பொழுது ராணுவ உடையில் வந்த போடோக்களை பார்த்தவர்கள் ராணுவம் என்று கருதி அசட்டையாக இருந்துவிட்டனர். அவ்வேளையில் திடீரென துப்பாக்கியால் போடோ பயங்கரவாதிகள் சுடத் துவங்கியுள்ளனர். இச்சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்

உண்மையை மறைக்கும் தமிழக ஊடகங்கள்:

ஆங்கில ஊடகங்கள் இந்த பயங்கர நிகழ்வை சரியாக படம்பிடித்துக் காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழக ஊடகங்களோ இப்படி ஒரு கலவரமே நடக்காததுபோல் ஒரு துணுக்குச் செய்தியைக்கூட வெளியிடாமல் இருட்டடிப்பு செய்கின்றது. தமிழக ஊடகங்களின் இந்த முஸ்லிம் விரோதப்போக்கு இந்திய இறையாண்மையை அசைத்து பார்க்க கூடியது....

செயலிழந்த மாநில அரசு; வேடிக்கை பார்த்த மத்திய அரசு:

அஸ்ஸாம் மாநிலத்தின் போடா லேண்ட் பகுதியே பற்றி எரிகின்றது. மாநில முதல்வரோ பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு டீ பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றார்.அஸ்ஸாமில் ஒன்றுமே நடக்கவில்லை எனவும் பத்திரிகைகள் பெரிதுபடுத்தி எழுதுகின்றன எனவும் உளறிக் கொட்டி கேவலப்பட்டுக் கொண்டு இருகின்றார்.

அஸ்ஸாம் மாநில முதல்வர் தரூன் கோகாய் மத்திய அரசு போதிய உதவி செய்யவில்லை. இராணுவத்தை அனுப்பவில்லை என மத்திய அரசை குறை சொல்கின்றார்.

மத்திய அரசோ மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறை சொல்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் மாநில அரசும் காங்கிரஸ்தான்; மத்திய அரசும் காங்கிரஸ்தான். இவர்களின் இந்த பூச்சாண்டி விளையாட்டால் பலியாவது அப்பாவி மக்கள் தான் . இத்தனைக்கும் இந்த மன்மோகன்சிங் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்துதான் மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது இன்னும் கேவலமான விஷயம்.

முஸ்லிம்கள் என்றாலே இரண்டாந்தர குடிமக்களாக பார்க்கும் காங்கிரஸ் அரசின் பச்சைத்துரோகம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

நியாமாக பார்த்தால் கலவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடவடிக்கை எடுக்காத மாநில முதல்வர் தரூன் கோகாய் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

அரசுகள் செய்ய வேண்டியது என்ன?:

லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் தற்போது அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் அவர்களின் வசிப்பிடங்களுக்குச் செல்லவிடாமல் ஆயுதமேந்திய போடோ தீவிரவாதிகளால் தடுக்கப்படுகின்றனர்.

1. மத்திய அரசு தனது இராணுவ பலத்தை பயன்படுத்தி முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ஆயுதங்களுடன் ஆக்கிரமித்துள்ள போடோ தீவிரவாதிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும். அப்பாவி மக்கள் அவர்களின் இருப்பிடங்களில் பாதுகாப்புடன் வசிக்க வழிவகை செய்ய வேண்டும்.

2. மீண்டும் இது போல கலவரம் நடக்காமல் இருக்க சட்ட விரோதமாக போடா தீவிரவாதிகள் வைத்திருக்கும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

3. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அகதிகளாக உள்ள குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

4. நாட்டின் அமைதியை சீர் குலைக்கும் போடோ தீவிரவாதிகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்த வேண்டும்!!

இந்தக் கலவரம் இதுவரை 80 உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. மேலும் போடோ தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களை வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் சொந்த ஊருக்குள் திரும்ப விடாமல் அச்சுறுத்துகின்றனர்.

முஸ்லிம்கள் நோன்பு நோற்று இறைவனை வழிபடும் இந்தப் புனித மாதத்தில் முஸ்லிம்களைக் கொன்றொழித்துக் கொண்டிருக்கும் போடோ தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத அஸ்ஸாம் மாநில அரசையும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய அரசையும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

No comments: