Saturday 1 September 2012

செல்போன் டவர்களின்(cellphone tower) கதிர்வீச்சு அளவு குறைப்பு இன்று முதல் அமல்


டெல்லி: நாடு முழுவதும் செல்போன் டவர்கள் வெளியிடுகிற கதிர்வீச்சின் அளவைக் குறைக்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய நடைமுறையின்படி, டவர்கள் வெளியிடும் கதிர்வீச்சு அளவு 10-ல் ஒரு பங்காக குறைக்கப்படும், அனைத்து வகை செல்போன்களின் உள்வாங்கும் கதிர்வீச்சு சக்தியின் அளவும் குறைக்கப்படும்.

குடியிருப்பு பகுதியில் இருந்து 35 மீட்டர் தள்ளியே செல்போன் டவர்கள் அமைக்கப்பட வேண்டும்.அனைத்து வகை செல்போன்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுகளுக்குட்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ள செல்போன்களை ஒரு ஆண்டுக்குள் திரும்பப் பெற்று கதிர்வீச்சை உள்வாங்கும் வீரியத்தைக் குறைக்க வேண்டும்,

ஐ.எம்.இ.ஐ. எண்களை புதிய அசெல்போனில் பதிவு செய்வதைபோல் கதிர்வீச்சின் அளவையும் பதிவு செய்யவேண்டும். இனி அனைத்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய கட்டுப்பாடுகளை கடைபிடித்து அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த செல்போன்களை சோதிக்க அரசு சார்பில் ஆய்வுகூடம் அமைக்கப்படும்.

No comments: