Saturday 7 April 2012

5 வயது சிறுமிக்கு திருமணம்: இங்கிலாந்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு!!



இங்கிலாந்தில் கடந்தாண்டில் மட்டும் இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்த 400 சிறுமிகளுக்கு கட்டாயத் திருமணம் நடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் கீழ் குழந்தை திருமண தடுப்பு பிரிவு செயல்படுகிறது.

இந்த பிரிவு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளை சேர்ந்த 400 சிறுமிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அந்த சிறுமிகளில் 5 வயது குழந்தையும் உண்டு. கடந்த 2008ம் ஆண்டில் 1,618 குழந்தை திருமண தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 2010ம் ஆண்டில் இது 1,735 ஆக அதிகரித்தது. பின்னர் 2011ம் ஆண்டில் 1,500 ஆக குறைந்துள்ளது.

பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளி விடுமுறையின் போது குழந்தைகளை சொந்த நாட்டுக்கு அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தாலும் முழு அளவில் தடுக்க முடியவில்லை. எனவே குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோருக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர பரிசீலித்து வருகிறோம் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments: