Tuesday 20 March 2012

உலகின் மிகவும் வண்ணமயமான நகரங்கள்!!

உலகின் வண்ணமயமான நகரங்கள், மனிதனின் கற்பனா திறன் கலைத் திறன் ஆகியவற்றை வியந்து பாராட்டத் தக்க வகையில் அமைந்துள்ளது.

இந்த நகரங்களின் வீடுகளது உள், வெளித் தோற்றத்தை எழிலூட்டச் செய்யும் பிரதான ஏதுவாக நிறப்பூச்சுக்கள் அமைந்துள்ளன.

அவ்வாறு வர்ணங்களினால் எழில் கோலம் பூண்டு ஜொலிக்கும் உலகின் முக்கிய நகரங்களைப் பார்க்கலாம்.

1. குனாஜூவாட்டோ நகரம், மெக்ஸிக்கோ (Guanajuato City, Mexico)

மெக்ஸிக்கோவின் குனாஜூவாட்டோ நகரம் மலைகளின் நடுவில் எழில்கோலம் பூண்டுள்ளது. 1554ஆம் ஆண்டில் காலணித்துவ ஆட்சியாளர்களினால் இந்த நகரம் நிர்மானிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவின் கனிய வளம் திரண்ட நகரங்களில் ஒன்றாக குனாஜூவாட்டோ கருதப்படுகின்றது. வெள்ளி உலோகம் அதிகளவில் இந்த நகரிலிருந்து அழகப்படுகிறது.

16ஆம் நூற்றாண்டில் கனிய வள அகழ்வூ அதிகளவில் காணப்பட்ட காலத்தில் இந்த நகரம் அமைக்கப்பட்டது. குனாஜூவாட்டோ நகரம் மிகவும் வண்ணமயமானதாகக் காணப்படுகின்றது. இந்த நகரின் வீதிக் கட்டமைப்பு மிகவும் திட்டமிட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் சுதந்திரமாக வீதிகளில் நடமாடுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. நிலக் கீழ் சுரங்கங்களில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

2. வில்லிம்ஸ்டாட், நெதர்லாந்து அன்டிலிஸ் ( Willemstad, Netherlands Antilles)

நெதர்லாந்தின் குராக்கோ தீவுகளின் தென் கரையோரப் பகுதியில் வில்லிம்ஸ்டாட் நகரம் அமைந்துள்ளது. நெதHலாந்து காலாணித்துவ கால கட்டிட கலைஞர்Hகளின் அற்புத கை வண்ணத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று நகரம் பூந்தா மற்றும் ஒட்ராபன்டா என்ற இரு பகுதிகளைக் கொண்டமைந்துள்ளது. பூந்தா பிரதான வHத்தக வலயமாகக் கருதப்படுகின்றது. இந்த நகரம் 1634ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த நகரத்தின் கட்டடங்கள் வண்ணக் கோலம் காண்போரை பரவசமூட்டும் வகையில் அமையப்பெற்றுள்ளது

3. வால்பரிசோ, ச்சிலி (Valparaiso, Chile)
ச்சிலியின் முக்கிய நகரங்களில் ஒன்றாக வால்பரிசோ கருதப்படுகின்றது. நாட்டின் முதன்மையான கடற்துறைமுகம் இந்த நகரில் அமைந்துள்ளது. இந்த நகரின் வீடுகள் வித்தியாசமான நிறப்பூச்சுகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த நகரில் கப்பல்களைத் திருத்துதல் மற்றும் நிறப்பூச்சு பூசும் தொழில்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு கப்பல்களுக்கு நிறப்பூச்சு பூசி எஞ்சும் நிறப்பூச்சுகளை மக்கள் எடுத்துச் சென்று வீடுகளுக்கு பூசி அலங்கரிக்கின்றனர். இதனால் இந்த நகரம் வண்ணமயமாக காட்சியளிக்கின்றது. வண்ணமயமான வீடுகள் வல்பரிசோ நகரின் அடையாளமாக மாறிவிட்டது.

4. சென் ஜோன்ஸ், நியூபன்ட்லாண்ட், கனடா (St. Johns, Newfoundland, Canada)

கனடாவின் நியூபன்ட்லாண்டின் தலைநகரமாக சென் ஜோன்ஸ் திகழ்கின்றது. நியூபான்ட்லாண்டின் கிழக்குப் பகுதியில் இந்த நகரம் அமைந்துள்ளது. சென் ஜோன்ஸ் மிகவும் எழில்மயமான நகரமாகக் கருதப்படுகின்றது. மரத்தினாலான வீடுகள் மிகவும் வண்ணமயமாக அமைந்துள்ளன.

5. மனாரோலா, இத்தாலி (Manarola, Italy)

இத்தாலியின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாக மனாரோலா கருதப்படுகின்றது. இத்தாலியின் சின்க்யூ டெரா மற்றும் இத்தாலியன் ரிவெரா ஆகிய நகரங்களுக்கு இடைநடுவில் மனாரோலா அமையப் பெற்றுள்ளது. மலைப் பிரதேசங்களுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த நகரம் மிகவும் வண்ணமயமான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இந்த நகரம் மிகவும் அழகிய தோற்றத்துடன் மிளிர்கின்றது.

6. வொரோக்லேவ், போலந்து (Wroclaw, Poland)

போலந்தின் தென்மேற்குப் பகுதியில் வொரோக்லேவ் நகரம் அமைந்துள்ளது. போலந்தின் மிகவும் கவர்ச்சிகரமான நகரமாக வொரோக்லேவ் கருதுப்படுகின்றது. இந்த நகரம் 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகவும், 14ஆம் நூற்றாண்டின் பிரிக் கொத்திக் கட்டிடக் கலை நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிகக்கப்படுகிறது.

இந்த கரம் ரோமன் கத்தோலிக்க மதத்தை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. எனவே இந்த நகரில் மிகவும் அழகிய தோற்றத்தை உடைய கத்தோலிக்க தேவாலயங்கள் அமைந்துள்ளன.
7. உட்ரிச்ட், நெதர்லாந்து (Utrecht, Netherlands)

உட்ரிச்ட் மாகாணத்தின் தலைநகராக உட்ரிச்ட் திகழ்கின்றது. மக்கள் செறிவு அதிகமானதும், பிரதான நகரமாகவூம் உட்ரிச்ட் கருதப்படுகின்றது. இந்த நகரில் 307,000 மக்கள் வாழ்கின்றனர். நெதர்லாந்தின் எழில் மிகுந்த நகரங்களில் ஒன்றாக உட்ரிச்ட் திகழ்கின்றது.

8. ஸ்டொக்கொம், சுவீடன் (Stockholm, Sweden)

உலகின் மிக அழகான தலைநகரங்களில் ஒன்றாக சுவீடனின் ஸ்டொக்கம் கருதப்படுகின்றது. இந்த நகரம் 14 தீவுகளை உள்ளடக்கியுள்ளதுடன், 57 பாலங்களின் மூலம் தீவுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.

அழகிய கட்டடங்கள், பசுமையான பிரதேசங்கள், நீர் நிலைகள் என நகரம் அற்புதமான தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. உலகின் மிகவும் தனித்துவமான நகரங்களில் ஒன்றாக ஸ்டொக்கம் திகழ்கின்றது.

9. ஜெய்ப்பூர், இந்தியா (Jaipur, India)

ஜெய்ப்பூர் நகரம் பல வர்ணங்களினால் அலங்கரிக்கப்படவில்லை என்ற போதிலும் அதனை இளஞ்சிவப்பு (Pink) நகரம் என அழைக்கப்படுகின்றது. ராஜஸ்தான் என்ற பாலைவன மாநிலத்தின் தலைநகரமாக ஜெய்ப்பூர் ஜொலிக்கின்றது.

பாரிய கோட்டைகள் முதல் சிறிய சந்தைகள் வரையில் நகரின் அநேக பகுதிகள் இளஞ்சிப்பு நிறத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த நகரில் ஒட்டகங்கள், மாடுகள், யானைகள் ஆகியன அதிகளவில் காணப்படுகின்றன. நிறப்பூச்சுக்களின் மூலம் சாதாரண நகரம் வித்தியாசமான நகரமாக மாற்றமடைந்துள்ளது.

No comments: