Monday 26 March 2012

வீட்டிற்கு மின்சார சப்ளை செய்யும் நிசான் எலக்ட்ரிக் கார்!


காரிலிருந்து வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை சேமித்து வைத்து சப்ளை செய்யும் புதிய தொழில்நுட்பத்தை நிசான் கண்டுபிடித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 3 நாட்களுக்கு தேவையான மின்சாரத்தை வீட்டிற்கு பெற முடியும்.

லீஃப் எலக்ட்ரிக் காரில்தான் இந்த புதிய சிஸ்டத்தை நிசான் அறிமுகப்படுத்தி உள்ளது. சூரிய சக்தி மற்றும் சார்ஜ் செய்து மின்சாரத்தை சேமித்து பின்னர் வீடுகளுக்கு வழங்கும் வகையில் இந்த சிஸ்டம் செயல்படும். இதற்காக, லீஃப் காரில் ஆற்றல் வாய்ந்த 24கிவிஎச் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

ஜப்பானிலுள்ள தனது தலைமையகத்துக்கு எதிரே அமைந்துள்ள அதன் புதிய கார் வடிவமைப்பு மையத்தில் இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய லீஃப் காரை நிசான் அறிமுகப்படுத்தியது.

நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய லீஃப் காரை விற்பனைக்கு கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் சாதாரண வீட்டு உபயோகத்திற்கு மூன்று நாட்கள் வரை மின்சப்ளை பெற முடியும் என்கிறது நிசான்.

அதெல்லாம் சரி, தமிழ்நாட்டுக்கு சீக்கிரமா கொண்டு வந்தா நிசானுக்கு புண்ணியமா போகும். ஆனால், காரோட விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி. நிசான் லீஃப் கார் ஜஸ்ட் ரூ.12.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார வாங்கறதுக்கு பதிலா 20,000 கொடுத்து ஒரு இன்வர்ட்டரை வாங்கிடலாம் போங்க.

No comments: