Friday 30 March 2012

3 (மூன்று) – திரை விமர்சனம்


அழுத்தமான கதையை இளமையை குழைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். பனிரெண்டாம் வகுப்பு படிக்கிற ஹீரோ ஒரு மழை பெய்யும் நாளில் ஹீரோயினை தெருவோரும் பார்க்கிறார், அவருக்கு சைக்கில் செயினை மாட்டி கொடுத்து அவர் மீது காதல் கொள்கிறார். அவள் பின்னாலேயே சென்று அவருடன் ஒரே டியூசனில் படித்து அவளுடன் நட்பாகி அவள் அப்பாவிடம் அடி வாங்கி அவளை காதலிக்க வைக்கிறாள். ஹீரோயின் , 15 வருடம் போராடி தன் தாய் அமெரிக்கா விசா வாங்கி வந்த நிலையில் தன் காதலுக்காக தன் பாஸ்போர்ட்-ஐ எரித்து தன் காதலை அழுத்தமாக தன் வீட்டிற்கு தெரிவிக்கிறார், பின் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமலேயே அவர்கள் கல்யாணம் டிஸ்கொதே கிளப்பில்
நடைபெறுகிறது. இதற்கு பிறகுதான் கதையே அது என்னனு நீங்களே தியேட்டரில் போய் பாருங்க.


தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் ஆரம்ப காட்சிகள். (இதற்கு முன் பெண்களையே பார்க்காதவன் போல முதல் பார்வையிலே அவள் பின்னாலேயே போய் அவளிடம் காதலை சொல்லும் ஹீரோ). உலகமே விரும்பி கேட்ட பாடலை இவ்வளவு சாதாரணமாக படமாக்கியிருக்கிறார்கள், அந்த படலை எதிர்பார்த்து போவது வேஸ்ட். நான் கதையை சொல்ல விரும்பவில்லை, உண்மையிலேயே அற்புதமான கதாபாத்திரங்கள். உதாரணமாக, ஸ்ருதி-யின் வாய் பேச முடியாத தங்கை, எப்பவுமே சிரித்த முகமாக இருப்பதிலும் சரி, அக்காவுக்கு சப்போர்ட் பண்ணி பேச முயற்சி பண்ணும் போதாகட்டும் சரி மனசுக்குள் என்னமோ பண்ணுது. காமெடிக்காக வந்தாலும் தான் வரும் அத்தனை காட்சிகளிலும் கவனிக்க வைக்கிறார் சிவகார்த்திகேயன். மெரீனா படம் சொதப்பினாலும், சிவா வரும் காட்சிகள் நல்லா இருக்கும், அந்த மேஜிக் இந்த படத்திலும் தொடர்கிறது (சந்தானத்துக்கு சரியான போட்டி). தனுஷ் – நடிகண்டா, ஆனாலும் மயக்கம் என்ன படத்தில் பண்ண அதே மேனரிசம். ஆனாலும் அட்டகாசம். ஒரு விஷயம் சொல்ல மறந்திட்டேன், படமே மயக்கம் என்ன படத்த ரீமேக் பண்ணினது போலதான் இருக்கு. ஸ்ருதி – ஏழாம் அறிவு படத்தில் கேட்ட அதே குரல் என்றாலும், இந்த படத்தின் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறது. நடிப்பை பொருத்தவரை உலகநாயகனின் கலை வாரிசு-ம் தான் என்பதை நிரூபித்திருக்கிறார். “மயக்கம் என்ன” சுந்தர் – இதிலும் அதே போல ஹீரோவின் நண்பன், ஆனாலும் ஹீரோவை காப்பாற்ற போராடும் அந்த செகண்ட் ஹாப் என்னா ஒரு பண்புறு வருணனை. ஐஸ்வர்யா – முதல் படத்திலேயே இவ்வவளவு அழுத்தமான மேக்கிங்.. வாழ்த்துக்கள்.


ரஜினியால் உயிர் பிழைத்த தனுஷ்-னு பரபரப்பா பேசபட்டது. படத்தில் தனுஷ் இறந்து விடுவது போல் வரும் காட்சிகளை ரஜினி மாற்ற சொன்னார்னு கேள்விபட்டேன் ஆனால் மாற்றவில்லை. ஏன்னா படத்தோட ஆணிவேரே அதுலதான் இருக்கு. அத அழகா நம் மனசுக்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் ஐஸ்வர்யா. இந்த படத்தில் வர்ற ஒரு சீனை பத்தி சொல்ல விரும்புகிறேன். “சுந்தர்”, தனுஷ் மற்றும் அவரது மனைவி ஸ்ருதியுடன் அவர்களின் பிளாட்டில் கொஞ்ச நாள் தங்க வேண்டிய “சூழல்” தனுசு லேட்டா வர ஸ்ருதி தனுசிடம் ஏன் லேட் என கேட்க ஆபீஸ்-ல வேலைன்னு சொல்லுறார் ஆனால் ஸ்ருதி, நான் ஆபீஸ்க்கு போன் பண்ணுனேன் நீ ஏழு மணிக்கே கேளம்பிட்டனு சொன்னன்கா என்கிட்டேயே பொய் சொல்லுரியானு கேட்டுக்கிட்டே அவரை அடிக்க போய் உன்மேல என்னால கோபப் படக்கூட முடியலன்னு சொல்லி கட்டி பிடிக்கிறார், அப்ப அங்க இருந்த ஸ்ருதி பிரண்ட் சுந்தரிடம் அவர்களை தனியாக விடுன்னு சொல்லி அவரை கூப்பிட்டுக்கொண்டே வெளியேறுகிறார். அற்புதமான காட்சி அமைப்பு அடுத்து தனுஷும் ஸ்ருதியும் கட்டி பிடித்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அப்போதும் அவர்கள் அருகிலேயே சுந்தர் நின்றுகொண்டிருக்கிறான். ஏன்? இதுதான் இந்த படத்தோட கரு. அது என்னனு படத்தோட ரெண்டாவது பகுதியில சொல்லியிருக்கிறார்கள். தனுஷுக்கு என்ன என்ன நடந்ததுன்னு தனுஷுடன் வாழ்ந்த ஸ்ருதிக்கே சுந்தர் சொல்வது போல் கதையை அமைத்திருப்பது திரைக்கதையின் சாமர்த்தியம், ஹேட்ஸ் ஆப் டூ ஐஸ்வர்யா.


படத்துல பெரும்பாலும் பின்னணி இசை அமைதியா இருக்கு அதுதான் நல்லாவும் இருந்துது. பாடல்கள் படத்தோட ஓட்டத்துக்கு இடைஞ்சலா இல்லாம இருந்ததே ஆறுதல். சில்வா அமைத்த ஒரேயொரு சண்டை செமயான மேக்கிங்.

No comments: