Showing posts with label world. Show all posts
Showing posts with label world. Show all posts

Friday, 10 August 2012

சீனாவில் கனமழை: உலக அதிசயமான சீன பெருஞ்சுவர் பாதிப்பு


சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால், உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீன நாட்டின் மீது எதிரி நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குவதை தவிர்ப்பதற்காக(1368-1644) இடைப்பட்ட கால கட்டத்தில் வடக்கு சீனாவில் ஹைபே மாகாணத்தில் இந்த பெருஞ்சுவர் கட்டப்பட்டது.

தற்போது இவை உலக அதிசயங்களுள் ‌ஒன்றாக பாதுகாப்பட்டு வருகிறது. இந்நிலையில் இம் மாகாணத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருதையடுத்து சுமார் 36 மீட்டர் நீள அளவிற்கு பெருஞ்சுவரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அ‌திக மழையால் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் நாடுகளில் சீனாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 23 May 2012

உலகின் மிகப்பெரிய அதி உயர கோபுரத்தை இன்று நீங்களும் பார்க்கலாம்



உலகின் மிகப்பெரிய, அதி உயர கோபுரம் என்று அழைக்கப்படும் டோக்கியோ ஸ்கை டிரீ இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபட்டது. அதிவேக எலிவேட்டர்கள் மூலம் சுமார் 8,000 பார்வையாளர்கள் இன்று இந்த உலகின் அதி உயர கோபுரத்திலிருந்து உலகைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோபுரம்634 மீட்டர்கள், அதாவது 2080 அடி உயர கோபுரமாகும் இது.

சீனாவில் உள்ள கேன்டன் கோபுரம் 600மீ,அதாவது 1968.5 அடி உயரம் கொண்டது. அதனையும் தாண்டி விட்டது டோக்கியோ ஸ்கை டிரீ. ஆனால் துபாயில் உள்ள புர்ஜ் கலிப்பா என்ற விடுதி 828 மீட்டரக்ள் உயரம் கொண்டது, அதாவது2,717 அடி உயரம் கொண்டது. ஒரு கட்டிடம் என்ற அளவில் இது மிக உயரமானது.

ஆனால் டோக்கியோ ஸ்கை டிரீ ஒரு கோபுரம் என்ற அளவில் உலகின் மிக உயரமானதாகும். இந்த கோபுரம் தொலைக்காட்சி, ரேடியோ ஆகியவற்றின் ஒலி/ஒளி பரப்பு கோபுரமாகச் செயல்படவுள்ளதோடு, சுற்றுலாப் பயணிகளின் பெரும் கவர்ச்சியாகவும் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, 8 April 2012

கடல் நீர் எப்படி உப்பானது ?


கடலில் இருந்து பெறப்படும் உப்பு நீரைக் கொண்டு உப்பு தயாரிக்கப்படுவதை அனைவரும் அறிவோம். ஆனால் கடல் நீர் எப்படி உப்பானது என்பது பலருக்குத் தெரியாது.

உலகம் தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. உலகின் ஆரம்பம் முதல் 0.75 பில்லியன் ஆண்டுகள் வரை பூமி குளிராமல் சூடாக இருந்தது. தண்ணீர் அனைத்தும் ஆவி ரூபமாக பூமியைச் சுற்றி மேகமாக இருந்தது.

பின்னர் ஒரு மழை..... பல நூற்றாண்டுகளாய் கடும் மழை. மழை விழுவதும், பூமியில் பட்டு ஆவியாவதும், குளிர்வதும், கொட்டுவதுமாக.. கடல் தோன்றியது.

கடல் முழுவதும் நல்ல தண்ணீர்.

அடுத்த 3.25 பில்லியன் ஆண்டுகளாக கடல் ஆவியாகி மேகமாக நிலத்தில் பெய்து, ஆறாகப் பெருகி கடலில் கலந்து, இதே போல் பல கோடி முறை திரும்பத் திரும்ப நடந்ததால் கடல் நீர் நிலத்தின் அரிமானத்தால் உவர்ப்புடையதாக மாறிவிட்டது. இது நான் சொன்னதல்ல. ஆய்வாளர்களின் கணிப்பு.

Saturday, 7 April 2012

5 வயது சிறுமிக்கு திருமணம்: இங்கிலாந்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு!!



இங்கிலாந்தில் கடந்தாண்டில் மட்டும் இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்த 400 சிறுமிகளுக்கு கட்டாயத் திருமணம் நடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் கீழ் குழந்தை திருமண தடுப்பு பிரிவு செயல்படுகிறது.

இந்த பிரிவு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளை சேர்ந்த 400 சிறுமிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அந்த சிறுமிகளில் 5 வயது குழந்தையும் உண்டு. கடந்த 2008ம் ஆண்டில் 1,618 குழந்தை திருமண தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 2010ம் ஆண்டில் இது 1,735 ஆக அதிகரித்தது. பின்னர் 2011ம் ஆண்டில் 1,500 ஆக குறைந்துள்ளது.

பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளி விடுமுறையின் போது குழந்தைகளை சொந்த நாட்டுக்கு அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தாலும் முழு அளவில் தடுக்க முடியவில்லை. எனவே குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோருக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர பரிசீலித்து வருகிறோம் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tuesday, 20 March 2012

சொர்க்கமா இது என்று வியக்க வைக்கும் பூங்கா!


Al Ain Paradise என்று அழைக்கப்படும் இந்த பூந்தோட்டங்களின் நகரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ளது. இங்கு 2,426 ஜாடிகளில் பூக்கன்றுகள் தொங்குகின்றன.




உண்மையில் கண்ணைக் கவரும் பல்வேறு நிறங்களில் அழகழகாக பூத்துக் குலுங்குகின்றன பூக்கள். இது உண்மையில் ஒரு சொர்க்கலோகம் தான்..

Saturday, 17 March 2012

நாகரீக உடை அணிந்தால் மரண தண்டனை கிடைக்கும்


இன்றைய இளைஞர்கள் நாகரீக உடைகள் அணிவதிலும், தலைமுடியை அலங்காரம் செய்து கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால் ஈராக் நாட்டில் வாழும் இளைஞர்கள் இத்தகைய செயலில் இறங்கினால் உயிருக்கு தான் ஆபத்து. இவை கீழ்த்தரமான செயல் என அங்குள்ள தீவிரவாதிகள் கருதுகிறார்கள்.

கடந்த மாதத்தில் கருப்பு நிறத்தில் இறுக்கமான பேண்ட் அணிந்த மற்றும் முடி அலங்காரத்தை மாற்றி அமைத்துக் கொண்ட சுமார் 15 இளைஞர்கள் கற்களால் அடித்து கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி இளைஞர்களின் நீண்ட பெயர் பட்டியலையும் வெளியிட்டு திருந்தி நடந்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதை மீறினால் இவர்களுக்கும் தண்டனை கிடைக்கும்.

குண்டு உடலை குறைக்காத போலீசாருக்கு சம்பளம் வெட்டு


இங்லாந்து நாட்டில் உள்ள ரானுவ வீரர்கள்,மற்றும் போலீசார் என்றால் மிடுக்காக இருக்க வேண்டும்.இதற்கு மிகவும் அத்தியாவசியமாக இருப்பது அவர்கள் தங்களது உடலை முறையாக வைத்துக் கொள்வதுதான். ஆனால் சிலரோ உடல் எடை அதிகமாகி தொப்பையுடன் காட்சி தருவதை பார்க்க முடிகிறது.இங்கிலாந்து நாட்டில் இது குறித்து கண்க்கெடுப்பு நடத்தினார்கள்.

இதில் 53 சதவீதம் போலீசார் எடை அதிகரித்து குண்டாக இருப்பது தெரியவந்தது. 100 பேரில் ஒருவர் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது.இதனால் இவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி உடல் பரிசோதனை (Fittness test நடத்தவும்,அதில் 3 சோதனக்குள் உடல் எடையை குறைக்க தவறினால் அவர்களது சம்பளத்தில் 8 சதவீதம் குறைக்கப்படும்

Saturday, 3 March 2012

ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் பள்ளி தலைமையாசிரியருக்கு எழுதிய கடிதம்.


மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு என் மகன் அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனாலும் மனிதர்களில் கயவன் இருப்பது போல பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும் ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும் ஒவ்வொரு பகைவனைப் போல ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

அடுத்து நான் சொல்ல வருவதை அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர் உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதே வேளையில் இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஏமாற்றுவதை விடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும் முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல் சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும் புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
தன் செயல் திறனுக்கும் அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால் தன் இதயத்திற்கும் தன் ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இது மிகப்பெரிய பட்டியல் தான். இதில் உங்களுக்குச் சாத்தியமானதை எல்லாம் அவனுக்கு நீங்கள் கற்றுக் கொடுங்கள்.
அவன் மிக நல்லவன் என் அன்பு மகன்.

Wednesday, 29 February 2012

சுனாமியில் பலியானவர்கள் பேயாக உலா வருகின்றனர்: அச்சத்தில் ஜப்பான் மக்கள்!!


ஜப்பானில் கடந்தாண்டு மார்ச் மாதம் 11ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்ததில் 19 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

மேலும் புகுஷிமா அணு உலை வெடித்ததில் கதிர்வீச்சு பரவி பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.தற்போது சிறிது சிறிதாக அணு உலை சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்கள் பேயாக மாறி பொதுமக்களை பயமுறுத்தி வருவதாக இஷினோமகி நகரில் கடும் பீதி நிலவுகிறது.

இறந்தவர்களின் சத்தங்கள் மற்றும் அலறல்கள் கேட்பதாக பலரும் கூறி வருவதால், மக்கள் சாலையில் நடமாட அஞ்சுகின்றனர்.

இதனிடையே நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியான நபர்களின் ஆன்மா சாந்தியடைய பரிகார பூஜைகளை செய்வதில் மதகுருமார்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tuesday, 21 February 2012

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரதை குறைத்து சொல்கிறது சீனா

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் எவ்வளவு என்பதில் சீனா - நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


சீனா - நேபாள எல்லையில் உள்ளது எவரெஸ்ட் சிகரம். இதுதான் உலகிலேயே மிக உயரமானது. இந்தியாவை சேர்ந்த பி.எல்.குலாடி என்ற சர்வேயர் தலைமையிலான குழுவினர், கடந்த 1954ம் ஆண்டு எவரெஸ்டின் உயரத்தை கணக்கிட்டனர். அதற்கு முன்னதாகவே 1852ம் ஆண்டு ராதாநாத் சிக்தர் என்பவர் அதன் உயரத்தை அளந்துள்ளார். அதன்பின் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் மலைகளின் உயரத்தை அளக்கும் போது, அதன் மீது படர்ந்திருக்கும் பனியை கணக்கில் கொள்ள கூடாது. வெறும் மலையின் உயரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே 8844.43 மீட்டர் உயரம்தான் எவரெஸ்ட் உள்ளது. இந்த உயரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று நேபாளத்தை சீனா நிர்பந்தப்படுத்தி உள்ளது.

அதன்படி எவரெஸ்ட் சிகரம் 3.57 மீட்டர் உயரம் குறைத்து கணக்கிடப்படும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சீனா - நேபாள எல்லை பிரச்னைகள் தொடர்பாக இந்த மாதம் பேச்சு நடப்பதாக இருந்தது. அதில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன என்ற சர்ச்சை உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட இருந்தது. ஆனால் நேபாளம் கேட்டுக் கொண்டதால் இருதரப்பு பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.

கடந்த 75ம் ஆண்டு நேபாள - சீனா எல்லை வரைபடம் குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் எவரெஸ்டின் உயரம் 8,848.13 மீட்டர் என்று அப்போது சீனா ஒப்புக் கொண்டது. இப்போது சிகரத்தின் உயரத்தில் சர்ச்சை எழுப்பி உள்ளது. இந்த பிரச்னையை மேலும் பெரிதாக்கும் வகையில் அமெரிக்க தேசிய புவியியல் சொசைட்டி ஒரு கணக்கை கடந்த 99ம் ஆண்டு வெளியிட்டது.

இந்த சொசைட்டி கூறுகையில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளந்த போது, 8,850 மீட்டர் உள்ளது. இந்திய சர்வேயர்கள் டிரிக்னோ மெட்ரிக் முறையில் அளந்துள்ளனர். ஜி.பி.எஸ்.தான் நவீன முறை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.