Showing posts with label tamilnadu chennai. Show all posts
Showing posts with label tamilnadu chennai. Show all posts

Friday, 27 July 2012

பள்ளி மாணவி ஸ்ருதி இறந்தது எப்படி? அதிர்ச்சியளிக்கும் விளக்கப் படம்!


மாணவி ஸ்ருதி நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி பேருந்தில் தாம்பரம் பரசு ராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றாள். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் (வலது ஓரம்) பெரிய ஓட்டை இருந்துள்ளது. அதில் பலகை வைத்து தற்காலிகமாக அடைத்து வைத்திருந்தனர்.

பேருந்து முடிச்சூர் சாலையில் வந்தபோது பேருந்து லேசாக குலுங்கியது. அப்போது ஓட்டை மீதிருந்த பலகை விலக, சிறுமி சுருதி அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து இறந்தார். மாணவி விழுந்தது வலது பக்கம் ஆதலால் பேருந்தின் வலது பீம் தலையில் அடித்து சாலையில் விழுந்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தின் வலது பின் மேல் ஏறியதில், உடல் நசுங்கி பலியாகிவிட்டார்.

(பேருந்து கொளுத்தப்பட்டு எரிகிறது)