Showing posts with label sex. Show all posts
Showing posts with label sex. Show all posts

Thursday, 9 August 2012

செக்ஸ் தரும் நன்மைகள் என்ன? சில உண்மைகள்!


காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பமுடியாமல் தடுமாறித்தான் போயிருக்கிறார்கள். சிற்றுயிர்கள் முதல் ஆறு அறிவு படைத்த மனிதர்கள் வரை அனைவரின் வாழ்வும் காமத்தில்தான் முற்றுப்பெருகிறது.



இரு உடல்கள் இணைவது இனப்பெருக்கத்திற்கு மட்டும்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் அது உண்மையில்லை என்று அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர். செக்ஸ் என்பது சிறந்த உடற்பயிற்சி என்றும் இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்புகள் குறையும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளனர். அதைப்போல கலவியில் ஈடுபடுவதன் மூலம் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும் என்று பல்வேறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பட்டியலில் உள்ள தகவல்கள் சுவாரஸ்யமானவை படியுங்களேன்.



சிறந்த பேச்சாளராக்கும்



படுக்கை அறையில் தம்பதிகளிடையே ஏற்படும் ஆத்மார்த்தமான உறவு அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறதாம். மிகப்பெரிய கூட்டத்தில் தைரியமாக பேசக்கூடிய அளவிற்கு மனதைரியத்தை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள். இதனால் மனஅழுத்தம், மேடைக்கூச்சம் நீங்கி தைரியமாக தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும் உறுதியாக கூறுகின்றனர் நிபுணர்கள்.



நோய் எதிர்ப்பு திறன் கொண்ட முத்தம்



உறவின் தொடக்கம் முத்தம்தான். இது சாதாரண சமாச்சாரமல்ல. முத்தத்தின் மூலம் நோய் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். மூளையின் செல்கள் சுறுசுறுப்படைகின்றனவாம். முகத்தின் அத்தனை தசை நரம்புகளும் இயங்குவதோடு முகத்தை சுருக்கமின்றி பாதுகாக்கிறதாம்.



ரத்த அழுத்தம் சரியாகும்



உறவின் வகைகள் பல உண்டு. அதில் ஒன்றான வாய்வழிப் புணர்ச்சியும் பல நன்மைகளை செய்கின்றதாம். பெண்ணை நுகர்ந்து, நாவின் மூலம் கிளர்ச்சியூட்டும் ஆண்கள் உள்ளனர். இதனால் பெண்களுக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்தால் குணமாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் வழக்கமாக உடலுறவின் மூலம் உயர்ரத்த அழுத்த நோய் இருந்தால் குணமாகும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



முகத்தை பொலிவாக்கும் விந்தணு



விந்தணு என்பது ஆண்மையின் அடையாளம். ஒரு துளியில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் காணப்படுகின்றன. இதன் எண்ணிக்கையை வைத்துதான் அவர்களின் ஆரோக்கியம், குழந்தை பேறு போன்றவை முடிவு செய்யப்படும். இந்த விந்தணு சிறந்த மாய்ஸ்சரைசிங் கிரீம் ஆக செயல்படுகிறதாம். இதில் உள்ள புரதச் சத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இறுக்கமாக மாற்றுகிறதாம். விந்தணுவில் துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், ப்ரக்டோஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. காண்டம் உபயோகிக்காமல் உறவில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் மூலம் ஏற்பட்ட காய்ச்சல் இருந்தால் குணமடையும் என்கின்றனர் நிபுணர்கள்.

Monday, 19 March 2012

உயிரணு உற்பத்திக்கு கொழுப்பு உணவு வேண்டாமே


பொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இன்றைய இளம் தலைமுறையினரின் முன்பு உள்ள முக்கியமான பிரச்சினை குழந்தையின்மைதான். இதற்கு உணவுப் பழக்கமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

கொழுப்பு சத்து உணவு

உடல் ஆரோக்கியம், உணவு பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புசசத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமும் இளைஞர்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 35 சதவிகித ஆண்கள் இதுபோன்ற குறைபாடினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் அதிக புகைப்பழக்கம் மதுப்பழக்கம், மன அழுத்தம், போன்றவையும் ஆண்களின் விந்தணு குறைபாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேசமயம் ஒமேகா 3 கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியில் குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆண்களின் குறைபாட்டினை போக்க சித்த மருத்துவத்தின் மூலம் நம் முன்னோர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அவற்றை பின்பற்றினால் விந்தணு குறைபாடு நீங்கி நல்ல பலன் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க:

ஜாதிக்காய்

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

பாதம், கல்கண்டு

தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும். இரவு படுக்கைக்கு செல்ல மூன்று மணி நேரத்திற்கு முன்பே முழு மாதுளம்பழம் சாப்பிட வேண்டும்.

வால் முளகு, பாதம்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

அரசம்பழம், அமுக்கராங்

அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

முருங்கைப் பூ கசாயம், முருங்கைகாய்

முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை ஒருடம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

Wednesday, 29 February 2012

நல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள்

திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது. யார் மூலமாகவோ கிடைக்கிற பூடக அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றன.
இதனாலே யே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது. அந்த இரவு அமைதியாகக் கழிய இதோ சில ஆலோசனைகள்…. முதலிரவு என்றாலே அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை. கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை.

முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும். அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது. இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல.

முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம். இதில் பல வியாதிகள் அடக்கமாம். பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம். முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும். அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம்.

முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும். அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். உறவை பலப்படுத்தும். எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல், உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித் தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது. இதுவே நல்ல துவக்கம். முதலில் இருவருக் குமிடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை.

Saturday, 11 February 2012

இளவயதில் செக்ஸ் வைத்துக் கொள்வது எதிர்காலத்தில், நரம்பு மண்டலத்தை பாதிக்கும்?


இளம் வயதில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது எதிர்காலத்தில் மூளை செயல்பாடுகள், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். டீன்ஏஜில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் கலாசாரம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பிறந்து 40 நாட்கள் ஆன பெருச்சாளிகளை வைத்து ஆய்வு நடத்தினர். நன்கு வளர்ந்தவை, மீடியம் வயதில் இருப்பவை, இளம் எலிகள் என மூன்றாக பிரிக்கப்பட்டன.

செக்ஸ் உணர்வை தூண்டும் ஊசி போட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர், எலிகளிடம் மருத்துவ ரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆராயப்பட்டன.


இதுபற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது:
மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது இளம் வயது எலிகளின் செயல்பாடுகள் செக்ஸ் உறவுக்கு பிறகு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், சோர்வு காணப்பட்டது. நரம்பு மற்றும் மூளை செயல்களும் பாதிக்கப்பட்டிருந்தன.


அன்றாட உணவைக்கூட உண்ணாமல் ஒரே இடத்தில் முடங்கி கிடந்தது. சரியான பருவத்தில் இருந்த எலிகள் வழக்கம்போல இருந்தன.
இளம் பருவத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது மூளை, நரம்புமண்டல வளர்ச்சியை பாதிக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாக தெரிகிறது. மனிதர்களுக்கும் இது பொருந்தும். இதன் பாதிப்பு உடனடியாக இருக்காது என்றாலும் எதிர்காலத்தில் அதிகரிக்கும்.