Showing posts with label science. Show all posts
Showing posts with label science. Show all posts
Thursday, 5 July 2012
எய்ட்ஸ் ஐ கட்டுப்படுத்த ஒரே ஒரு மாத்திரை – ஆய்வு முடிவு!
ஒரு நாளைக்கு ஒரே ஒரு மாத்திரை மட்டும் சாப்பிடுவதன் மூலம் எச் ஐ வி தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்பதை அமெரிக்க ஆய்வின் முடிவுகள் உறுதிசெய்வதாக லான்செட் சஞ்சிகை தெரிவித்திருக்கிறது.
எச் ஐ வி தொற்றுக்குள்ளானவர்களின் நோய் முற்றி, எயிட்ஸ் நோயாக மாறாமல் தடுப்பதற்கு தற்போது ஆண்டிரெட்ரோவைரல் மருந்துகள் மாத்திரை வடிவில் அளிக்கப்படுகின்றன.
இந்த மருந்துகள் எயிட்ஸ் நோயை உருவாக்கும் எச் ஐ வி தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்டவர்கள் சராசரி வாழ்க்கை வாழ்வதற்கு பெரிதும் துணை புரிகின்றன. இந்த ஆண்டிரெட்ரோவைரல் மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டால், பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகள் உயிர்வாழ முடியும்.
ஆனால் இந்த ஆண்டிரெட்ரோவைரல் மருந்துகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாத்திரைகளாக இருப்பதால், ஒருவர் ஒருவேளைக்கு மூன்று முதல் ஐந்து மாத்திரைகள் வரை விழுங்கவேண்டியிருக்கிறது. இந்த மருந்து மாத்திரைகளை வேளாவேளைக்கு சாப்பிடத் தவறினால் எச் ஐ வி வைரஸ் மேலும் வலிமைந்து பாதிக்கப்பட்டவரை தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது.
இதற்கு மாற்றாக ஒரு நாளைக்கு ஒரே ஒரு மாத்திரை மட்டும் சாப்பிட்டாலே எச் ஐ வி நோயை கட்டுப்படுத்தலாம் என்கிற நிலையை தோற்றுவிப்பதற்காக குவாட் பில் என்று பரவலாக அறியப்படும் மாத்திரை ஒன்று உருவாக்கப்பட்டது.
இதன் பயன்பாடு வழமையான ஆண்டிரெட்ரோவைரல் மாத்திரைகள் அளவுக்கு எச் ஐ வி தொற்றை கட்டுப்படுத்துகிறதா என்பதற்கான ஆய்வுகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டன.
இதுவரை மூன்று கட்டங்களை எட்டியுள்ள இந்த ஆய்வின் முடிவில், ஒரு நாளைக்கு ஒருமாத்திரை மூலம் எச் ஐ வி தொற்றை பாதுகாப்பாகவும், வலிமையாகவும் கட்டுப்படுத்த முடியும் என்று தெரியவந்திருக்கிறது. இந்த மாத்திரை எளிமையானது, பாதுகாப்பானது பயனுள்ளது என்கிறார் இந்த ஆய்வில் பங்கேற்ற ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் துணைப்பேராசிரியர் பால் சாக்ஸ்.
Labels:
science
0
comments
பிரபஞ்சம் உருவானது எப்படி!!
பிரபஞ்சம் உருவானது எப்படி என்ற ரகசியத்தை அவிழ்க்கிற விதத்தில், கடவுள் துகளை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது.ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது. அணுக்களால் ஆனது உலகம் என்று.
13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு `பிக்-பேங்க்' எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.
எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் நாம் வாழுகிற பூமி,நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி.,செல்போன்,மேஜை,நாற்காலி என வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன.இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.
இந்நிலையில், அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது.
அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால்,பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின் போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
இதற்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து,உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.
கடவுள் துகள்
இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன.12-வது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது கடவுள் துகள் என்று கூறப்படுகிறது.
இந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது 'கடவுள் துகள்' எனப்படும் ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டு விட்டது.
இது தொடர்பான அறிவிப்பை ஜெனீவாவில் திரளான விஞ்ஞானிகள் முன்னிலையில் விஞ்ஞானி ஜோ இன்கண்டேலா வெளியிட்டார்.அதே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஹிக்ஸ் பாசன் துகள்தானா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
பிரபஞ்ச ரகசியம் அவிழும்
செர்ன் தலைமை இயக்குனர் ரோல்ப் ஹியூயர் இது பற்றி கூறுகையில்,"ஒரு புதிய மைல் கல்லை நாங்கள் எட்டி இருக்கிறோம். ஹிக்ஸ் பாசன் துகளை கண்டறிந்து இருப்பது, புதிய விரிவான ஆய்வுகளுக்கு வழிநடத்தி இருக்கிறது. இது பிரபஞ்ச ரகசியம் பற்றிய திரைகளை அவிழ்க்க உதவும்"என்றார்.
Labels:
science
0
comments
Tuesday, 3 April 2012
ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும்
1) தொலைநோக்கியை (Telescope)
கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
அவர் எத்தனையாம்
ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தார்?
Galileo Galilei, Italy, 1593.
2) ஆகாய விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர்
எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு ஆகாய விமானத்தை கண்டுபிடித்தார்?
Wright Brothers, America, 1903.
3) துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தார்?
Macmillan, Scotland, Year ?.
4) மின்பிறப்பாக்கியை (Dynamo) கண்டுபிடித்தவர்
யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர்
எத்தனையாம் ஆண்டு மின்பிறப்பாக்கி
யை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1831.
5) டைனமைற்றை (Dynamite) கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு டைனமைற்றை கண்டுபிடித்தார்?
Alfred Nobel, Sweden, 1867.
6) ஒக்சிஜனை (Oxygen) கண்டுபிடித்தவர் யார்? அவர்
எத்தனையாம் ஆண்டு ஒக்சிஜனை கண்டுபிடித்தார்?
Joseph Priestley on 01 – August – 1774.
7) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர்
யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர்
எத்தனையாம்
ஆண்டு தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தார்?
John Logie Baird, England, 1926. (Born in Scotland)
8) தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்? அவர்
எத்தனையாம்
ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்தார்?
Alexander Graham Bell, 1876.
9) தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார்?
Henry Mill, England, 1714. 10) பென்சிலினை (Penicillin) கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு பென்சிலினை கண்டுபிடித்தார்?
Allen Fleming, Scotland, 1928.
11) மின்மாற்றியை (Transformer ) கண்டுபிடித்தவர்
யார்? அவர் எத்தனையாம்
ஆண்டு மின்மாற்றியை கண்டுபிடித்தார்?
Michael Faraday, 1831 — William Stanley, 1885
(Modern Transformer)
12) மின்கலத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு மின்கலத்தை கண்டுபிடித்தார்?
Anastasio Volta , Italy, 1807.
13) குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர்
யார்? அவர் எத்தனையாம் ஆண்டு குருதிச்
சுற்றோட்டத்தை கண்டுபிடித்தார்?
William Harvey, 1628.
14) புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார்?
Isaac Newton, England, 1687.
15) Transistor இனை கண்டுபிடித்தவர் யார்? அவர்
எத்தனையாம் ஆண்டு Transistor
இனை கண்டுபிடித்தார்?
மூன்று பௌதீகவியலாளர்களின்
கூட்டு முயற்சியால் Transistor
கண்டுபிடிக்கப்பட்டது அவர்களின் பெயர் விபரம்:- John Bardeen, Walter Brattain, William Shockley,
1947.
16) கணனியை (Automatic Calculator)
கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
அவர் எத்தனையாம்
ஆண்டு கணனியை கண்டுபிடித்தார்?
Wilhelm Schickard , German, 1623.
17) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண்
யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர்
எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற்
சிகரத்தை சென்றடைந்தார்?
Junko Tabei, Japan, 16 – May – 1975.
18) இரசாயணவியலில் நோபல் பரிசு பெற்ற
தம்பதிகள் யார்? அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?
அவர்கள் எத்தனையாம் ஆண்டு நோபல்
பரிசினை பெற்றார்கள்?
Frederic Joliot & Irene Curie, France, 1935.
19) வட துருவத்தை சென்றடைந்த முதல் மனிதன் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எந்த ஆண்டில்
வட துருவத்தை சென்றடைந்தார்?
Robert Edwin Peary, American, 06 – April – 1909.
20) துணைக்கோள்களற்ற (Moons)
இரண்டு கோள்கள் எவை?
Mercury, Venus.
21) அணு குண்டை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு அணு குண்டை கண்டுபிடித்தார்?
Robert Oppenheimer, America, 1945.
22) மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்
விளக்கை கண்டுபிடித்தார்?
Thomas Alva Edison, America, 1879.
23) ஒலிபெருக்கியை கண்டுபிடித்தவர் யார்? அவர்
எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு ஒலிபெருக்கியை கண்டுபிடித்தார்?
Horace Short, Britain, 1900.
24) நுணுக்குக்காட்டியை (Microscope)
கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
அவர் எத்தனையாம் ஆண்டு நுணுக்குக்காட்ட
ியை கண்டுபிடித்தார்?
Janssen, Netherlands, 1590.
25) பக்ரீரியாவை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு பக்ரீரியாவை கண்டுபிடித்தார்?
Leeuwenhock, Netherlands, 1683.
26) வாயு அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு வாயு அடுப்பை கண்டுபிடித்தார்?
Robert Wilhelm Bunsen, Germany, 1855.
27) இரும்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு இரும்பை கண்டுபிடித்தார்?
Henry Bessemer, England, 1856.
28) Benzene இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு Benzene இனை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1825.
29) X – ray இனை கண்டுபிடித்தவர் யார்?அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு X -
ray இனை கண்டுபிடித்தார்?
Wilhelm Conrad Rontgen, German, 1895.
30) X – ray இனை கண்டுபிடித்தவரு
க்கு எத்தனையாம் ஆண்டு நோபல்
பரிசு வழங்கப்பட்டது?
1901 ஆம் ஆண்டு (First Nobel Prize for Physics In)
Labels:
science
0
comments
Monday, 19 March 2012
ரஞ்சிதா – நித்தியானந்தா வீடியோ : தடய அறிவியல் நிபுணர் சந்திரசேகரன் திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டு
பெங்களூரு, மார்ச் 19- நடிகை ரஞ்சிதாவுடன் தனியறையில் இருந்த காட்சி பொய் என்று தவறானது அறிக்கை தருமாறு நித்தியானந்தாவின் சீடர்கள் தம்மை அணுகியதாக தடய அறிவியல் நிபுணர் சந்திரசேகரன் திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
தடய அறிவியல் துறையில் நெடுநாள் அனுபவமும் பத்மபூஷன் விருதும் பெற்றவருமான பி. சந்திரசேகரன், பெங்களூருரில் இதனைக்கூறியுள்ளார்.
அந்த வீடியோவை தாம் ஆய்வு செய்தபோது நிலையான இடத்தில் பொருத்தப்பட்ட காமிரா மூலம் எடுக்கப்பட்டது என்பதும், அதில் மார்பிங் போன்ற காட்சி தந்திரங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா பற்றிய பாலியல் வீடியோ ஒளிபரப்பப்பட்ட உடனே அடுத்த நாள் காலையில் சென்னையில் இருந்த நித்யானந்தாவின் ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவர், எனக்கு தொலைப்பேசி செய்து, இந்த வீடியோ பொய் என்று ஒப்பீனியன் கொடுக்க முடியுமா என கேட்டார்.
நான் சொன்னேன்; வீடியோவைப் பார்த்து பொய் நிஜம் என்றெல்லாம் சொல்ல முடியாது. சந்தேகப்பட்ட வீடியோவைகொண்டு வரவேண்டும் என்றேன். ஆனால் அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் ஆசிரமத்தில் இருந்து யாரும் வரவில்லை.
ஆனால் அடுத்த நாள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் இருந்து, அந்த பாலியல் வீடியோவையும், நித்தியானந்தா சொற்பொழிவு ஆற்றும் வீடியோவையும் கொடுத்து இதில் இருப்பது உண்மைதானா? நித்தியானந்தாதானா? என விஞ்ஞானப்பூர்வமாக சொல்ல முடியுமா என கேட்டனர்.
அதை கணினியில் வைத்து ஆராய்ந்து பார்க்கும்போது, அது ஒரு கேமராவை நிலையான இடத்தில் பொருத்தி எடுக்கப்பட்டது தெரியவந்தது. அதில் உள்ள உருவங்கள் எல்லாம் ஆடாமல் நிலையான இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ என்றும், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என்றும் கண்டுபிடித்தேன்.
அந்த வீடியோவிலே அனிமேஷன், எடிட்டிங், மார்பிங் எல்லாம் இருக்க சாத்தியமேயில்லை. திரும்பத் திரும்ப ஆய்ந்து பார்த்ததில் அதில் ஒரிஜினல் வீடியோதான். இதில் எந்த சேர்க்கையோ அல்லது விடுபட்டதற்கான தடயங்கள் இல்லை என்பதை கண்டறிந்தேன்.
அந்த வீடியோவில் நித்தியானந்தாவின் உருவமும், ரஞ்சிதாவின் உருவமும்தான் இருந்தது. அந்த வீடியோவை வேறு ஒருவருடன் எடுக்கப்பட்டது என ரஞ்சிதா சொல்வதிலும் உண்மையில்லை என்று சந்திரசேகரன் கூறியுள்ளார்.
இந்த வீடியோ உண்மையானது அல்ல என்று அமெரிக்க நிபுணர்கள் சான்று தந்திருப்பது பற்றி கேட்டதற்கு, சர்வதேச தரத்திற்கு உள்ள அய்தராபாத் ஆய்வகத்தில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த காட்சிகள் உண்மைதான் உறுதி கூறியிருப்பதை சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவுக்கு நிந்தியானந்தா அனுப்பி வைத்த சிடி வேண்டுமானால் போலியாக இருக்ககூடும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை சென்னையில் நித்தியானந்தா பத்திரிகையாளர்களைக் கூட்டி நானும், ரஞ்சிதாவும் படுக்கையறையில் இருக்குமாறு வெளியான சி.டி. பொய்யானது என்று வெளிநாட்டு நிபுணர்கள் கூறியதாகக் கூறி தம்பட்டம் அடித்துக் கொண்டார். இது முற்றிலும் பொய் என்பதை சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் உணர்ந்துகொள்ளலாம்.
Labels:
science
0
comments
Friday, 16 March 2012
நடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே !
நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது.
மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்களையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக் கொண்டு முதலில் இவர்களை நடக்கவிட்டனர். பின்னர், பார்வையை பாதியாக மறைத்துக் கொண்டு இவர்களை அதே இலக்கை நோக்கி நடக்க விட்டனர். அவர்களின் நடக்கும் தன்மை, வேகம் முதலியன கண்காணித்து அளவெடுக்கப்பட்டன. பின்னர், மொபைல் போனில் பேசிய படியும், டெக்ஸ்ட் டைப் செய்த படியும் நடக்கவிடப்பட்டனர்.
ஆய்வுகளில் தெரிந்த முடிவுகள் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தன. மொபைல் போனில் பேசியபடி நடக்கையில் 16% வேகமும், டெக்ஸ்ட் டைப் செய்கையில் 33% வேகமும் குறைந்தது. நேராக நடக்காமல் 61% திசை மாறி நடந்து பின்னர் இலக்கினை அடைய முடிந்தது. குறிப்பாக டெக்ஸ்ட் டைப் செய்கையில், இலக்கை விட்டுவிட்டு எங்கோ சென்றது தெரியவந்தது.
இதனால் இவர்களின் உணர்திறன் குறைந்தது. செயல் திறன் நினைவு தப்பியது. எந்த இடத்தில், எப்படி செயல்படுகிறோம் என்பதையும் சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் நிலையையும் இந்த பழக்கங்கள் மறக்கடிக்கச் செய்கின்றன.
இவையே பல ஆபத்துக்களை தானாக வலிய வரவேற்கும் வழிகளைத் திறக்கின்றன என இந்த ஆய்வின் முடிவுகள் தெரியப்படுத்தி உள்ளன. ஓடும் கார்களின் பாதையில் செல்வது, திறந்திருக்கும் கழிவுநீர் குழிகளில் விழுவது, மேடு பள்ளங்களில் தடுமாறி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விழுவது போன்ற விளைவுகளைச் சுட்டிக் காட்டி இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. உயிர் வாழ்ந்தால் தானே, உடம்பில் கை, கால்கள், கண்கள் சரியாக இருந்தால் தானே நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியும். எனவே நடக்கும்போது மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.
மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்களையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக் கொண்டு முதலில் இவர்களை நடக்கவிட்டனர். பின்னர், பார்வையை பாதியாக மறைத்துக் கொண்டு இவர்களை அதே இலக்கை நோக்கி நடக்க விட்டனர். அவர்களின் நடக்கும் தன்மை, வேகம் முதலியன கண்காணித்து அளவெடுக்கப்பட்டன. பின்னர், மொபைல் போனில் பேசிய படியும், டெக்ஸ்ட் டைப் செய்த படியும் நடக்கவிடப்பட்டனர்.
ஆய்வுகளில் தெரிந்த முடிவுகள் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தன. மொபைல் போனில் பேசியபடி நடக்கையில் 16% வேகமும், டெக்ஸ்ட் டைப் செய்கையில் 33% வேகமும் குறைந்தது. நேராக நடக்காமல் 61% திசை மாறி நடந்து பின்னர் இலக்கினை அடைய முடிந்தது. குறிப்பாக டெக்ஸ்ட் டைப் செய்கையில், இலக்கை விட்டுவிட்டு எங்கோ சென்றது தெரியவந்தது.
இதனால் இவர்களின் உணர்திறன் குறைந்தது. செயல் திறன் நினைவு தப்பியது. எந்த இடத்தில், எப்படி செயல்படுகிறோம் என்பதையும் சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் நிலையையும் இந்த பழக்கங்கள் மறக்கடிக்கச் செய்கின்றன.
இவையே பல ஆபத்துக்களை தானாக வலிய வரவேற்கும் வழிகளைத் திறக்கின்றன என இந்த ஆய்வின் முடிவுகள் தெரியப்படுத்தி உள்ளன. ஓடும் கார்களின் பாதையில் செல்வது, திறந்திருக்கும் கழிவுநீர் குழிகளில் விழுவது, மேடு பள்ளங்களில் தடுமாறி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விழுவது போன்ற விளைவுகளைச் சுட்டிக் காட்டி இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. உயிர் வாழ்ந்தால் தானே, உடம்பில் கை, கால்கள், கண்கள் சரியாக இருந்தால் தானே நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியும். எனவே நடக்கும்போது மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.
Labels:
science
0
comments
Subscribe to:
Posts (Atom)



