Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Wednesday, 1 August 2012

"32 பேர் பலியான ரெயில் விபத்து சதி வேலையா?



நேற்று முன்தினம் 32 பயணிகளைப் பலி கொண்ட தமிழ்நாடு விரைவு தொடர்வண்டி தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, தனது
அறிக்கையை விசாரணை குழுவிடம் அளித்துள்ளது என்றும் அதில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்படவில்லை

என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இக் கோர விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் டி.கே.சிங் தலைமையிலான அதிகாரிகள் நெல்லூரில் விசாரணை தொடங்க உள்ளனர். சக பயணிகள், விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள், ரயில்வே அதிகாரிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட
உள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் அதிகாலை ஆந்திர மாநிலம் நெல்லூர் நிலையத்துக்கு வந்தது.அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ரயிலின் எஸ்11 பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 32 பேர் பலியானதாகவும், 26 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரைஅப் பெட்டியில் இருந்து 28 சடலங்களே கரிக்கட்டைகளாக மீட்கப்பட்டுள்ளன.அவற்றில் இதுவரை 19 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டன. மீதமுள்ள 9 உடல்கள் ஆணா, பெண்ணா என்று தெரியாத அளவுக்கு உருகுலைந்து போயுள்ளன.

இது விபத்தா, நாச வேலையா - ஆய்வு அடிப்படையில், தீ பிடித்த பெட்டியில் பயணம் செய்த 11 மர்ம ஆசாமிகள் இந்த நாசவேலையில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அடையாளம் காணப்பட்ட 15 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தீ விபத்து நடந்த பெட்டியில் 72 படுக்கை வசதிகள் உள்ளன. மொத்தம் 72 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், அதில் விஜயாவாடாவை சேர்ந்த 5 பேரும், நாக்பூரை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்யவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, 66 பேர் மட்டுமே பெட்டியில் பயணம் செய்திருக்க
வேண்டும். ஆனால், இருக்கைகளைவிட கூடுதலாக 11 பேர் பெட்டியில் இருந்ததாக சிகிச்சை பெற்று வருபவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது எஸ்11 பெட்டியில் 83 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் சந்தேகிக்கும்படி 3 நபர்கள் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பயணம் செய்ய அனுமதித்ததாக பயணச்சீட்டுப் பரிசோதகர் சமனகாந்த்தை
இருப்புப்பாதை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொத்தம் 28 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. இதில் 20 ஆண்கள், 6 பெண்கள், 2 குழந்தைகள் என தெரியவந்துள்ளது. ஆனால், இந்த பெட்டியில் பயணம் செய்த 11 பேரின் நிலைமை என்ன என்று இதுவரை தெரியவில்லை. அவர்கள் எலும்பு உட்பட முழுவதுமாக கருகி சாம்பலானார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அடையாளம் தெரியாமல் இருக்கும் சடலங்களின்
உடல்பாகங்களை எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நெல்லூர் அரசு மருத்துவமனையில் இந்த சடலங்கள் ஒரு மாதம் வரை அழுகாத வகையில் குளிர்சாதன வசதியுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து கடந்த 2 நாட்களாக ரயில்வே மின்துறை நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது. விபத்து நடந்த இடத்தை முழுமையாக ஆய்வு செய்து, அறிக்கையை நேற்றிரவு விசாரணை அதிகாரி டி.கே.சிங்கிடம் ஒப்படைத்தது. அதில், தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பெட்டியின் 40ம் எண்
சீட்டில் இருந்து தீ பிடித்து 22ம் எண் இருக்கை வரை பரவியது என்றும், அதன்பிறகு பெட்டி முழுவதும் தீ பரவியுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எரிந்த பெட்டியில் 40வது சீட்டின் கீழே பெரிய அளவிலான ஓட்டை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் அல்லது வேறு ஏதாவது ரசாயனம் மற்றும்
வெடிமருந்து பொருட்களை யாராவது சட்டவிரோதமாக சென்னைக்குக் கொண்டுச் சென்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களிடம் விசாரித்தபோது, தீ விபத்து ஏற்பட்டு 4 நிமிடங்களிலேயே பெட்டி முழுவதும் தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது என்றும், அதற்கு முன்பாக 3 முறை வெடி சத்தம் கேட்டது என்றும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விரைவு தொடர்வண்டி விபத்துக்கு மின்கசிவு காரணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட இரசாயன பொருட்களால் விபத்து ஏற்பட்டதா அல்லது சதி வேலை காரணமா என்ற கோணத்தில் காவல்துறை மற்றும் ரயில்வே துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Tuesday, 20 March 2012

காத்திருப்பேன்.. 17 வயது மாணவனைக் கடத்திக் கைதான ஆசிரியை பிடிவாதம்!


சென்னை: என்னால் மாணவனைப் பிரிந்திருக்க முடியாது. அதேபோல அவனாலும் என்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது. அவனுக்கு 21 வயது வரும் வரை காத்திருப்பேன். அதற்குப் பிறகு சேர்ந்து வாழ்வேன். அதுவரை அவனை எனது மகன் போல பார்த்துக் கொள்வேன் என்று முறை தவறிய உறவால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த 37 வயது ஆசிரியை குமுது கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னையை அதிர வைத்த சம்பவம் 17 வயது மாணவனுடன், 37 வயது ஆசிரியை வீட்டை விட்டு ஓடிப் போன விவகாரம். அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை குமுதுவையும், மாணவனையும், கடும் சிரமத்திற்குப் பின்னர் போலீஸார் டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

இருவரும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். பின்னர் குமுதுவை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனை சிறார் சீர்திருத்த காப்பகத்தில் அடைத்தனர்.

மைனர் பையனை கூட்டிச் சென்றதால் ஆசிரியை குமுது மீது கடத்தல் வழக்கைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர். மாணவனுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் மாணவனைப் பிரிந்து பெரும் வேதனையில் இருக்கிறாராம் ஆசிரியை குமுது. இதுகுறித்து அவர் சிறை அதிகாரிகளிடம் கூறுகையில், நாங்கள் பழகுவதில் இத்தனை சட்ட சிக்கல் இருக்கும் என தெரியவில்லை. இருந்தாலும் மாணவனுக்கு 21 வயது ஆகும் வரை நான் காத்திருப்பேன்.

வாழ்ந்தால் அவனோடு தான் வாழ்வேன். மாணவனை என் மகன் போல் பார்த்து கொள்வேன். என்னை, மாணவன் நெடுநாள் பிரிந்து இருக்க மாட்டான் என்கிறாராம் ஆசிரியை குமுது.

குமுது வட மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள பள்ளியில் இந்தி ஆசிரியையாக இருந்து வந்தார். அவர் வேலை பார்த்த பள்ளியில் பிளஸ் ஒன் படித்தவன்தான் அந்த 17 வயது மாணவன்.

மாணவனுடன் தனக்கு ஏற்பட்ட முறை தவறிய உறவு குறித்து முன்னதாக ஆசிரியை குமுது அளித்த வாக்குமூலத்தில்...

நான் வேலை பார்த்த பள்ளியில் 7 மற்றும் 8-வது வகுப்புகளுக்கு இந்தி பாடம் சொல்லிக்கொடுப்பேன். எனக்கு பெற்றொர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். எனக்கும், எனது கணவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்டுக்கொள்வோம்.

கடந்த செப்டம்பர் மாதம் எனது கணவர் சிறிய மனத்தாங்கலில் என்னைவிட்டு பிரிந்து, அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். நான் தனிமையில் மிகவும் அவதிப்பட்டேன். அப்போதுதான் மாணவனுடன் அறிமுகம் ஏற்பட்டது. செப்டம்பர் மாதம் பள்ளியில் ஒரு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒரு நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்தில் மாணவனும் நடித்தான். நான்தான் நாடக ஒத்திகை சொல்லிக் கொடுத்தேன்.

எதேச்சையாக கட்டிப்பிடித்து காதல் வயப்பட்டோம்

அப்போது நாங்கள் இருவரும் ஏதேச்சையாக கட்டிப்பிடித்து விட்டோம். அந்த முதல் ஸ்பரிசம் என்னை மின்சாரம் தாக்கியதுபோல் தாக்கிவிட்டது. அதில் இருந்து நாங்கள் இருவரும் காதல் வயப்பட்டோம். இருந்தாலும், அவன்தானஅ முதலில் காதலை சொன்னான். எனது அழகை அவர் வர்ணிப்பான். அவன் வகுப்பில் முதல் மாணவர். நான் அதை பாராட்டுவதுபோல அவனை புகழ்ந்து பேசுவேன். இப்படியாக காதல் வளர்ந்தது.

16 வயது மாணவியாக உணர்வேன்

எனது கணவர் வீட்டில் இல்லாதது, எங்களுக்குள் காதல் மேலும் வளர ஒரு தூண்டுதலாக இருந்தது. நான் அவனை சந்திக்கும்போதெல்லாம் என்னை ஒரு 16 வயது மாணவியைப்போல மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். அவன் பிளஸ்-1 வகுப்பு என்பதால் எங்களால் அடிக்கடி பார்த்துக்கொள்ள முடியாது. பள்ளி முடிந்து வீடு செல்லும்போது, இருவரும் பார்த்து பேசிக்கொள்வோம். செப்டம்பர் மாத கடைசியில் ஒரு நாள் அவனை எனது வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். அந்த சந்திப்புதான் எங்களை காதலோடு, நிறுத்தாமல் உடல் ரீதியாகவும் இணைய வைத்தது.

அதன்பிறகு இருவரும் அடிக்கடி எனது வீட்டில் சந்தித்து உல்லாசத்தை பகிர்ந்து கொண்டோம். செல்போனில் இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருப்போம். எங்கள் காதல் விவகாரம் அவனது தந்தைக்கு தெரிந்துவிட்டது. அவர் என் மீது போலீசில் புகார் கொடுத்துவிட்டார். பின்னர் சமாதானமாக பேசி முடித்து விட்டனர். அதன்பிறகு அவனை பள்ளிக்குவர அவனது தந்தை தடை போட்டு விட்டார். அவனை செல்போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் மிகவும் தவித்த நிலையில் இருந்தேன்.

இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரி மாதம் 26, 27, 28 ஆகிய 3 நாட்களும், பள்ளி பிராக்டிக்கல் வகுப்பில் கலந்துகொள்ள வந்தான். அப்போது நாங்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டோம். மீண்டும் நாங்கள் காதல் வானில் சிறகடித்து பறந்தோம்.

எல்லாவற்றையும் மறந்தோம்..உல்லாசத்தை முடிவு செய்தோம்

இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால், நாம் மீண்டும் சேர முடியாது, இதில் நாம் சேர்ந்து வாழ நல்ல முடிவு எடுத்தாக வேண்டும் என்று அவன் கூறினான. நாங்கள் அப்போது வயது வித்தியாசத்தை பார்க்கவில்லை. போலீஸ் மற்றும் சட்டம் பற்றி சிந்திக்கவில்லை. மாணவர்-ஆசிரியை என்ற மதிப்புமிக்க உறவு பற்றியும் நாங்கள் மறந்துவிட்டோம். சென்னையை விட்டு, வெளியேறி உல்லாச வாழ்க்கையில் மிதக்க முடிவு செய்தோம்.

நான் ரூ.60 ஆயிரம் செலவுக்கு பணம் எடுத்துக்கொண்டேன். இருவரும் கடந்த 4-ந் தேதி அன்று புதுச்சேரிக்கு பஸ்சில் சென்றோம். நாங்கள் செய்த காரியம் எவ்வளவு பெரிய தவறான காரியம் என்பது பற்றி நினைக்கவில்லை. அதன்பிறகு கோவை, சேலம் ஆகிய ஊர்களுக்கும் சென்றோம். அங்கு லாட்ஜுகளில் தங்கி சந்தோஷமாக இருந்தோம். அதன்பின் நாக்பூர், டெல்லி வழியாக ஜம்மு சென்றோம். ஜம்முவில் வைஷ்ணவி கோவிலில் தங்கி இருந்தோம்.

இதற்குள் செலவுக்கு நான் எடுத்துச்சென்ற பணம் தீர்ந்து போனது. சென்னையில் உள்ள எனது தங்கைக்கு போன் செய்து உதவி கேட்டேன். அவள் டெல்லியில் அவளது தோழி வீட்டுக்கு செல்லுமாறு கூறினாள். அதன்படி டெல்லி சென்றோம். அங்கு எனது தங்கையின் தோழி எங்களை ஏமாற்றி விமானத்தில் சென்னை அழைத்து வந்து விட்டார். இங்கு போலீசார் எங்களை பிடித்துவிட்டனர்.

எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை. எங்கள் காதலை வாழவிடுங்கள். இனி எனது கணவருடன் சேரமாட்டேன். வாழ்ந்தால் அவனோடு வாழ்வேன். அவன் கிடைக்காவிட்டால் நான் செத்து மடிவேன். அவனுக்கு 21 வயது முடியும்வரை நான் காத்திருப்பேன் என்றார் குமுது.

இதேபோலத்தான் அந்த மாணவனும் கூறி வருவதாக தெரிகிறது. மாணவனுக்கு தற்போது கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனராம். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நிஜத்தை உணர ஆரம்பித்துள்ளானாம் அந்த மாணவன்.

முன்னதாக நேற்று கோர்ட்டில் ஆசிரியை குமுதுவை ஆஜர்படுத்தினர் போலீஸார். அப்போது அவர் கதறி அழுதபடி இருந்தார். மயங்கியும் விழுந்தார். அவருக்கு சூடான டீ வாங்கிக் கொடுத்து போலீஸார் அமைதிப்படுத்தினர். அப்படியும் கூட அவர் அழுதபடிதான் இருந்தார்.

என்ன சொல்வதென்று தெரியவில்லை...!

Monday, 19 March 2012

வடிவேலு ரியல் எஸ்டேட் விவகாரம்: காமெடி ஆக்கினாரா விவேக்?


வடிவேலு - சிங்கமுத்து இடையே எழுந்த நிலத் தகராறு, மோசடி வழக்குகள் ஊரறிந்த கதை. இந்த சீரியஸ் பிரச்சினையை ஒரு படத்தில் தமாஷாக்கியிருக்கிறாராம் இன்னொரு காமெடியன்.

அவர் விவேக்.. படம் கந்தா!

பாபு கே விஸ்வநாத் இயக்க, கரண் ஹீரோவாக நடித்துள்ள படம் இது. முன்பே ரிலீஸ் ஆக வேண்டியது. கொஞ்சம் டிலே ஆகி, அடுத்த வாரம் வருகிறது.

விவேக்கை நேரில் பார்த்தபோது, 'வடிவேலுவுக்கும் சிங்கமுத்துக்கும் நடுவே எழுந்த ரியல் எஸ்டேட் பிரச்னையை கந்தா படத்தில் சீண்டியிருக்கிறீர்களாமே?' என்று கேட்டோம்.

அதற்கு அவர், "கந்தா படத்தில் ரியல் எஸ்டேட் பிரச்னையை வைத்து நான் ட்ராக் பண்ணியிருப்பது உண்மைதான். ஆனால், இது காமெடி ட்ராக் முடிந்து ஷூட்டிங் முடிந்த பிறகுதான் வடிவேலு பிரச்னை வெளிவந்தது.

அதற்கும் இதற்கும் எந்த தொடர்பு இல்லை.. கந்தா பட்ஜெட் படம் என்பதாலும், தியேட்டர்கள் கிடைக்காததாலும் இந்தப் படம் இப்போது தான் வருகிறது. வடிவேலுவிடம் கூட இதுதொடர்பாக பேசிவிட்டேன்," என்றார்.