Showing posts with label india. Show all posts
Showing posts with label india. Show all posts

Sunday, 5 August 2012

வறட்சியில் மூழ்கும் இந்தியா?


பருவ மழை போதாத காரணத்தால் மூன்று வருடங்களில் இந்தியா முதல் தடவையாக வறட்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பசுபிக் சமுத்திரத்தின் ´´எல்லினோ தாக்கம்´´ காரணமாக செப்டம்பர் மாதத்தில் மழை வீழ்ச்சி சராசரியைவிட மிகவும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை துறைத் தலைவரான ஜெனரல் லக்ஷ்மன் சிங் ராத்தோர் கூறியுள்ளார்.


இந்த எல்லினோ தாக்கந்தான் உலகமெங்கிலும் காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.


இந்த மழை வீழ்ச்சிக் குறைவு, ஆசியாவின் மூன்றாவது பெரிய இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள்.


அதனால் பொருளாதார வளர்ச்சி குறைவதுடன், உணவு விலைகளின் விலையும் அதிகரிக்கலாம்.

Wednesday, 1 August 2012

லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!



லண்டன் ஒலிம்பில் தொடக்க விழாவில் நம் இந்திர வீரர்களின் அணி வகுப்பும் நடந்தது அல்லவா?

அதில் நம் வீரர்களுடன் படு ஸ்டைலாக் ஒரு பெண் இணைந்து நடந்து வந்தாள்.

நம் இந்திய வீரர்கள் அனைவரும் யூனி பார்மில் இருக்க இம் மங்கை மட்டும் மாட்ர்ன் ட்ரஸில் …!

ஆரம்பத்தில் இருந்து யாருமே இதை கவனிக்காத சூழ்நிலையில் நம் மத்திய அமைச்சர்களில் ஒருவர் மறு நாள் – அதுதான் நேற்று மாலை இந்த போட்டோவை பார்த்து விட்டு தன் உயர் அதிகாரிகளிடம் யாருய்யா இது? என்று கேட்டார்.

அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

இதையடுத்து இங்குள்ள அதிகாரிகள் உடனடியாக லண்டன் போயுள்ள சக அதிகாரிகளிடம் விசாரித்த போது …

அவ்ர்களுக்கும் யார் இவ்ர்? என்று தெரிய வில்லையாம்.

அணி வகுப்பு முடிந்த பின் நம் வீரர்களிடம் கை குலுக்கி விட்டு காணாமல் போய் விட்டாராம் அவ்ர்.

இப்போது நம் இந்திய வீரர்கள் பதக்கம் வாங்குவதைப் பற்றி அப்புறம் யோசிக்கலாம் – முதலில் அந்த மர்ம பெண் யார்? என்று கண்டு பிடித்து தகவல் தாருங்கள் என்று டெல்லி மேலிடம் லண்டனில் உள்ள நம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து விசாரித்ததில்–

ராகுல் காந்தியின் காதலி நோயெலா என்னும் பெண் தான் இந்த சிவப்பு ஆடை உடுத்தி- நம் இந்தியாவின் மானத்தை கப்பலில் ஏற்றிய பெண்.

மேலும் இந்த பெண் ஜாகீர் ஷாவின் பேத்தியாகும். இதன் மூலம் காங்கிரஸ் கூடாரத்தில் இன்னுமொரு பெரும் புயல் வீசும்.அது பற்றியும் ஒரு தனிக் கட்டுரை விரைவில் தருகிறேன்.

இந்த பெண் சுஷில் குமாருடன் நடந்து வந்தது பற்றி சுஷில் குமாரிடம் கேட்டபோது எனக்கொன்றும் தெரியாது என கூறினார்.

ஆக்டிங் சீஃப் மிஷன் பிரிகேடியர் முரளிதரன் இதை பெரும் அவமானமாக எடுத்து இந்திய அதிகாரிகளிடம் விசாரிக்க தொடங்கியபோது தான் இந்த விஷயம் வெளியே வந்தது.

முதலில் அசெம்பிளிங் நடந்த இடத்தில் நிறைய இந்தியாவை சார்ந்தவர்கள் மார்ச் ஃபாஸ்ட்டுக்கு போகும் வீரர்களிடம் கை குலுக்கு வாழ்த்தி அனுப்புவது வழக்கம்

அப்படி செய்யும் போது இவரும் வழியனுப்ப வந்திருப்பதாக நினைத்தார்கள்.

ஆனால் அந்த பெண் இவர்களுடன் சிரித்து ஏதேதோ பேசிக் கொண்டே கடைசி வரை அணி வகுப்பிலும் வலம் வந்து பின்னரும் எல்லா வீரர்களிடம் கை குலுக்கி பின்பு நழுவி விட்டார்.

Tuesday, 26 June 2012

"காந்தி,இந்திராவை சுட்டவர்களும் இந்தியாவை சுடுபவர்களும் !!!



சுதந்திரம் பெறும்வரை மகாத்மா காந்தியின் உயிருக்கு இந்தியர்களால் மட்டுமின்றி, ஆங்கிலேயர்களாலும் ஆபத்து நேரிடவில்லை! சுதந்திரம் அடைந்து ஆறு மாதங்களில் காந்தி, இந்துமத வெறியன் நாதுராம் கோட்சேவால் சுட்டு சொல்லப் பட்டார்! ஆர்.ஆர்.எஸ்.தொடர்பும், வீர் சாவர்கர் பின்னணியுடனும் செயல்பட்ட நாதுராம் கோட்சே என்பவன் மகாத்மா காந்தியை சுடும்போது, தனது கையில் "இஸ்மாயில் "என்று முஸ்லிம் பெயரை பச்சை குத்தி இருந்தான்.! முஸ்லிம் ஒருவனால் காந்தி சுடப்பட்டு, இறந்ததாக கருதப்பட வேண்டும்..,! இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் வரவேண்டும், ஒருவருக்கொருவர், வெட்டிக்கொண்டு சாக வேண்டும் !! என்ற படுபயங்கரத் திட்டமுடன் காந்தி படுகொலை சம்பவம் நடந்தது!

காந்தியை படுகொலையை செய்தவர்களுக்கு, பாகிஸ்தான் தனி நாடக பிரிந்து போனதும், பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு என்றும் மதசார்புள்ள நாடு என்றும் பிரகடனப் படுத்திக் கொண்டதுபோல, " இந்தியா ஒருஇந்துநாடு" என்று அறிவிக்காமல் போன வருத்தமும் இருந்தது! காந்தி உயிரோடு இருக்கும்வரை அது நடக்காது என்ற கோபமும் அவரது படுகொலைக்கு காரணமாக அமைந்தது!

இந்திராகாந்தி படுகொலை அவரது பாதுகாப்பு படையில் இருந்த 'பியாந்த் சிங்','சத்வந்த் சிங்' என்ற சீக்கியர்களால் நடைபெற்றது. காரணம் இந்துமதத்தில் இருந்தும் முஸ்லிம் மதத்தில் இருந்தும் வேறுபட்டு , தங்களுக்கு என்று புதிய மதமும் கொள்கைகளும்,நடவடிக்கைகளையும் கொண்டிருந்த சீக்கியர்களின் புனித இடமும் பொற்கோவிலும் ஆன இடத்தில் இந்திய ராணுவத்தை இந்திராகாந்தி அனுப்பி நடவடிக்கை எடுக்கச் செய்தது.!

'ஆப்ரேசன் ப்ளூ ஸ்டார்' என்ற பெயரில், அமிர்தசரஸ் பொற்கோவிலில் இந்திய ராணுவம் புகுந்து தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது. பொற்கோவிலில் ராணுவம், "பூட்சு" காலுடன் நுழைந்து.. "காலிஸ்தான்" கோரிப போராடிய சீக்கியர்களை சுட்டுகொன்றது.! இத்தனைக்கும் இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றவர்கள், இந்திராவால் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட " பிந்தரன் வாலே" போன்றவர்களை அரசியல் காரணங்களுக்காக வளர்த்து விட்டவரே, பயன்படுதியவரே இந்திரா காந்திதான்!

தனக்கு பிரச்சனை என்று வந்தவுடன் தன்னால் வளர்க்கப் பட்டவர்களை தீர்த்துக்கட்ட ராணுவத்தை, அதுவும் அவர்கள் புனித, வழிபாட்டுதளமாக கருதும், பொற்கோவிலில் நுழைந்து, தாக்குதல் நடத்தியதை சீக்கியர்கள் மன்னிக்க தயாராக இல்லை! விளைவு? தனது சீக்கிய பாதுகாப்பு அதிகாரிகளால் இந்திரா காந்தி சுட்டுகொல்லப் பட்டார்!

இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்திய வரலாறில் பெரும் அதிர்ச்சியையும் மாற்றத்தையும் எற்படுதியவைகள்! இந்திய மதவாதிகள் குறித்த தெளிந்த பார்வையையும் படிப்பினையையும் தருபவைகள்! இந்தியாவின் முன்னேற்றம், பொதுஅமைதி, வளர்ச்சி, தேச பாதுகாப்பு, ஆகியவைகளுக்கு என்றுமே "மதம்" உதவாது! என்பதை நிருபித்த, நிதர்சன உண்மைகள் ஆகும்! மக்கள் நலனுக்கு மதங்களால் நேரிடும் அபாயத்தை தெரிவிப்பவைகள்! மேலும் மதங்களையும் மதவாதிகளையும் அரசியலில் இருந்து அப்புறப் படுத்தவும், அவர்களிடம் இருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவும் சொல்லித் தரும் பாடங்கள்.... காந்தி, இந்திராகாந்தி படுகொலைகள்! !

இந்த பாடத்தையும் படிப்பினையையும் ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ளவில்லை,அறிந்து வழிநடத்தவில்லை என்பது கசப்பான உண்மையாக உள்ளது! அன்றி, ஊழல்,கருப்பு பணம், போன்ற மோசமான செயல்களை தடுத்து நிறுத்தி, மக்களையும் நாட்டையும் வழி நடத்த வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள், இன்று அவைகளை வளர்க்கும், ஊக்கப்படுத்தும் கீழ்த்தரமான செய்கைகளில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடு! இதோடு மட்டுமின்றி, மாநிலங்களுக்குள் மோதலை நீடிக்க விட்டும், மதவெறியை வளர்த்தும் வருவது, இந்திய இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கும் செயலாகும்! காந்தியைப் போல, இந்திரா காந்தியைப் போல, இந்திய தேசியத்தை சுட்டு...இடுகாட்டுக்கு அனுப்பும் அறிவீனம் ஆகும்!

Monday, 19 March 2012

பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?

(டிஎன்எஸ்) பட்ஜெட்டில் கச்சா எண்ணெய் பொருட்கள் மீதான சுங்கவரி இந்த பட்ஜெட்டில் குறைக்கப்படாததால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் பிராணப் முகர்ஜி இன்று 2011- 2012ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் பேரல் ஒன்றுக்கு 110 டாலர் உயர்ந்துள்ளது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதனால் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறை க்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இது தெதடர்பான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கச்சா எண்ணெய் மீதான சுங்கவரி 5 சதவீதமாகவும், பெட்ரோல், டீசல் மீதான வரி 7.5 சதவீதத்திற்கு மிகாமலும் உள்ளது.

இதனால் 1 லிட்டர் பெட்ரோல் மூலம் 14.35 ரூபாய் வரியும், 1 லிட்டர் டீசலில் 4.60 ரூபாய் வரியும் பெறப்படுகிறது.

பெட்ரோல் விற்பனை செய்யும் நிறுவனங்களான ஐ.ஓ.சி., ஹெச்.பி.சி.எல்., பி.பி.சி.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் 1 லிட்டர் பேட்ரோல் விற்பனையில் 2.25 ரூபாய் நஷ்டத்தை சந்தித்தன. இந்த நிலையில் கடந்த ஜுன்மாதம் எண்ணெய் நிறுவனங்களே விலையை தீர்மானித்துக்கொள்ள அரசு அனுமதி அளித்திருந்தது.

அதன்பிறகு பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விற்பனையில் 1 லிட்டருக்கு ரூ. 21.60 பைசா அளவிலும், 14.2 கிலோ அளவுள்ள கேஸ் விற்பனையால் ரூ.356.07 என்ற அளவிலும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் அரசு மானியத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் மானியம் குறைக்கப்பட்டுள்ளது.

பிரணாப் முகர்ஜி எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு 38,386 கோடி மானியம் வழங்கி இருந்தார். ஆனால் இந்த பட்ஜெட்டில் 23,640 கோடி ரூபாய் மட்டுமே மானியம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2011-12 ஆண்டுக்கான பட்ஜெட்டில் எண்ணெய் விற்பனை மூலம் 1,03,292 கோடி நஷ்டம் ஏற்படும் அபாயம் இருப்பதால் பெட்ரோல், டீசல் விலை மார்ச் 18-க்குப்பிறகு உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது குறித்து பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழுவுடன் ஆலோசன நடத்த உள்ளதாக கூறினார். இந்த நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் 76,559 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. (டிஎன்எஸ்)

Saturday, 26 November 2011

கனவு காணுங்கள் - Dr. கலாம்

உங்கள் கனவில் மீனா வந்தால்
நீங்கள் வாழ்வில் வீனா போவீர்கள்..,

சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்..,

சிநேகா வந்தால் செத்து போவீர்கள்..,

அசின் வந்தால் அழிந்து போவீர்கள்..,

ஆகையால் கனவு காணுங்கள்

காதலில் தவிக்கும் சந்தியாவை
பற்றி அல்ல...

கஷ்டத்தில் தவிக்கும்
இந்தியாவைப் பற்றி...

ஜெய்ஹிந்த்...