Showing posts with label LOVE. Show all posts
Showing posts with label LOVE. Show all posts
Tuesday, 1 May 2012
காதலித்து பார்
காதலித்து பார் பார் கோவில் ஆகும், பீர் தெய்வம் ஆகும்.
உன் இம்சை தங்காமல் போன் ஸ்பீக்கர் பழுதாகும், உன் போனில் அவளின் பேர் தவிர மற்ற பெண்களின் போன் நம்பர் அழியும் அல்லது அழிக்கப்படும்
காதலித்து பார்... மூன்று அடி தூரத்தில் சாராயம் இருந்தும் குடிக்க முடியாத துன்பத்தை அனுபவித்ததுண்டா...? மூன்று நேரமும் போன் கதைத்து செவி பறை கிழிய வேண்டுமா காதலித்து பார்.
அம்மா வீட்டுக்கும் அவளின் ஊருக்கும் மாறி மாறி பயணம் செய்யும் நிலை தேவையா....? எங்கே நீ நின்றாலும் என்ன நீ செய்தாலும் அவள் போன் எடுக்கும் போது அதை சொல்லவேண்டிய கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா....? அதற்காகவேனும் காதலித்து பார்.
அப்பாவிடம் மறைத்து பழகிய உண்மைகள் அவளிடம் அம்பலம் ஆகியதுண்டா? அவளுக்கு தெரியாமல் பீர் அடித்து அவளிடம் பிடிபட்டு சண்டையில் ஒரு நாள் நாசமாக வேணுமா?
அடிக்கடி லவ் யு சொல்லும் வெட்டி தனம் தேவையா? காதலித்து பார். இன்பாக்ஸ் பார்த்து அவள் சண்டை பிடிக்கவும் நம்பர் பிஸி அல்லது waiting பார்த்து அவள் கேள்வி கேட்கும் நிலைமை ஏற்படவும் 10 மணிக்கு வரும் தூக்கத்தை இரவு 1 மணிவரை சுமந்து கொண்டு போன் கதைக்கும் துன்பம் ஏற்படவும் காதலித்து பார்.
நண்பர்களை தனிமையாக்கி தனியே போய் போன் கதைப்பாய், அவர்கள் திட்டும் போதும் நக்கல் அடிக்கும் போதும் சுரணை இல்லாதவன் போல சிரிக்க உன்னால் முடியுமா? காதலித்து பார்.
அவளுக்கு தெரியாமல் பொய் சொல்லி பீர் அடிக்கும் சந்தோசத்தை உன்னால் அடைய முடியுமா? அவள் போன் எடுக்கும் போது ஒடனே receive பண்ண வேண்டிய வேகம் வேண்டுமா? அவள் அழும்போது நம்ம weekness பூரா சொல்லவேண்டிய நிலை தேவையா? காதலித்து பார்.
ஒரு தலையா காதலித்தால் மகனே தப்பினாய் இரண்டு பக்கமும் என்றால் சங்கு தான் மவனே...
Labels:
LOVE
0
comments
Saturday, 7 April 2012
உங்களது காதல் உண்மை காதலா?? ஒரு முறை பரிச்சித்து பாருங்கள்!!
உங்களதும் உங்களின் விருப்பத்திற்குரியவரது பெயர்களை இங்கே இருக்கும் கட்டங்களில் இட்டால் இருவருக்குமிடையில் எவ்வளவு பொருத்தம் என்பதை அறிந்துகொள்ளலாம். முயற்சியுங்கள்!!
Labels:
LOVE
0
comments
Friday, 30 March 2012
காதலிக்கும் பெண்ணை அறிவது எப்படி? – அருமையான 15 ஐடியாக்கள்!
1) TV’யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு
இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல்
நிலைத்திருக்கும்.
2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை
என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள்
என்று அர்த்தம்.
3) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமை
உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான்.
அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப்பிடித்து
வாங்குவாள்.
4) ஆனந்த விகடன் மட்டுமே படித்துக் கொண்டு இருந்த பெண், Womens Era, Femina
படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.
5) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் செல்ஃபோன் இருக்கும். அவளது
எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலுக்கு
மட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த கால் வந்தவுடன்
“சொல்லுப்பா” என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப
முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று…
6) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில்
தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம்.
(கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா
சாமி)
7) சின்ன வயசுல இருந்து நீங்க சொன்னா ஒழுங்கா மஞ்சள் தேச்சு குளிக்கிற பொண்ணு,
கொஞ்ச நாளா மட்டும் மஞ்சள் தேச்சி குளிக்க அடம் பிடிக்கறான்னா அப்பவே நீங்க
புரிஞ்சுக்கலாம், பொண்ணு எங்கயோ லாக் ஆகிட்டான்னு….
8) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால்
ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய்
பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் “சொல்லுடி”
என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும்
“சொல்லு விமலா, அப்புறம் விமலா” என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி
கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள்
படும் சிரமம் அது.
9) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், “இன்னைக்கு என்
ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்”
எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று
எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம்
கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப்
செய்து விடுவீர்களா?
10) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம்
காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.
11) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி
முறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு மனநிலை
சரியில்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம்
ஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.
12) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா
இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத
மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க
உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.
13) “வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா
இருக்கு இல்லை” என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா
இவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)
14) வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்… என்று உங்களிடம் பேச
ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள “பல்ப்” எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம்.
சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு…
அப்புறம்தான் பதில் வரும்.
Labels:
LOVE
0
comments
Friday, 17 February 2012
பதின் பருவக் காதல்: பெற்றோர்கள் ஆலோசனை அவசியம்!
அரும்பாக இருந்து மலரும் பருவம் பதின் பருவம். வாழ்க்கையில் மிகப்பெரிய
மாற்றத்தை ஏற்படுத்துவதும் இந்த காலம்தான். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி
காரணமாக இலைமறை காயாக தெரியவேண்டிவை எல்லாம் நடுக்கூடத்திற்கே வந்து
சேர்கிறது.
மொபைல்போன், இன்டர்நெட், என கைகளில் தவழும் மின்னணு பொருட்களினால் காதல் பற்றியும், பாலியல் ரீதியான உறவுகள் பற்றியும் பள்ளிக்குழந்தைகளும், பதின் பருவத்தினரும் அதிகம் அறிந்து கொள்ள நேரிடுகிறது. இதனால் பெரும்பாலோர் வாழ்க்கையே தடம் மாறிப்போகிறது. எனவே பதின் பருவ குழந்தைகளை உடைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கண்காணித்து தகுந்த ஆலோசனை வழங்கவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
தற்கொலைக்கும் துணிகின்றனர்
பதின் பருவத்தில் காதல் என்பது அனைவரையுமே தொட்டுப் பார்ப்பது இயற்கை. ஆனால் குழந்தைகள் காதலிக்கிறார்கள் என்றதும் ஊரையே கூட்டி எல்லாருக்கும் சொல்வது மட்டுமல்லாது அவர்கள் ஏதோ செய்யக்கூடாத தவறுகளை செய்வது போல பார்ப்பது அவர்களை தற்கொலை பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
மனநெருக்கடி அதிகரிப்பு, உறக்கம் இல்லாமல் தவித்தல், தனிமையில் உட்கார்ந்து சம்மந்தம் இல்லாமல் யோசித்தல், மன அழுத்தத்துக்கு உள்ளாகுதல் போன்றவை பதின் பருவத்தினரை தற்கொலை வரை கொண்டு செல்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. எனவே உங்கள் குழந்தைகளை பாதுகாக்க உளவியல் வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக
ஒதுக்குவது ஆபத்து
குழந்தைகள் காதலில் விழுந்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே அவர்களை குற்றவாளிகள் போல நடத்தவேண்டாம். இதுவே அவர்களை மன உளைச்சல்களுக்கு ஆளாக்கும். மாணவப் பரு வத்தில் வரும் காதலால் படிப்பு, எதிர்கால லட்சியத்தில் விழும் கேள்விக் குறிகளை பெற்றோர் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்காக அக்கம்பக்கத்து வீடுகள், உறவினர் வீடுகளுக்கு தகவல் அனுப்பி, குழந்தைகளின் காதல் ரக சியத்தை பரப்பிவிட வேண்டாம். இது அவர்களை எதிர்மறையாக சிந்தனை செய்ய வைத்து விடும்.
வெளியே அழைத்துச் செல்லுங்கள்
பதின் பருவத்தில் புத்திமதி எடுபடவில்லை எனில் சிறந்த மனோதத்துவ நிபுணரிடம் அவர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களின் நெருங்கிய நண்பர், பிடித்த உறவினர் மூலம் நல்ல விஷயங்களை எடுத்துக் கூறி புரிய வைக்கலாம். காதல் வாழ்க்கையால் எதிர்காலத்தை இழந்து தவிப்பவர்களைப் பற்றி எடுத்துக்கூறி நடைமுறை வாழ்க்கை என்ன என்பதை புரிய வைக்கலாம். அவர்கள் விரும்பும் இடங்கள், நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தலாம்.
ஆபத்தாகும் தனிமை
மகளோ-மகனோ காதலிப்பது தெரிந்துவிட்டால் கண்கொத்திப் பாம்பாக பின்தொடர்ந்து நிழல்போல் கண்காணிக்க கூடாது. எக்காரணம் கொண்டும் காதல் வயப்பட்ட தங்கள் குழந்தையை தனிமைப்படுத்தவோ, சந்தேக கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது. வழக்கமான அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் வீட்டில் தான் தனிமைப் படுத்தபடவில்லை என்கிற நம்பிக்கை அவர்களிடம் தெளிவை ஏற்படுத்திவிடும். அப்புறம் அவர்களாகவே யோசித்து நல்ல முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் எதிர்ப்பு அதிகமானால்தான் அதற்கான ஆர்வம் அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு தகுந்த ஆலோசனையும், அரவணைப்பும் இருந்தால் அவர்கள் தடம் மாறிப்போக வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
மொபைல்போன், இன்டர்நெட், என கைகளில் தவழும் மின்னணு பொருட்களினால் காதல் பற்றியும், பாலியல் ரீதியான உறவுகள் பற்றியும் பள்ளிக்குழந்தைகளும், பதின் பருவத்தினரும் அதிகம் அறிந்து கொள்ள நேரிடுகிறது. இதனால் பெரும்பாலோர் வாழ்க்கையே தடம் மாறிப்போகிறது. எனவே பதின் பருவ குழந்தைகளை உடைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கண்காணித்து தகுந்த ஆலோசனை வழங்கவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
தற்கொலைக்கும் துணிகின்றனர்
பதின் பருவத்தில் காதல் என்பது அனைவரையுமே தொட்டுப் பார்ப்பது இயற்கை. ஆனால் குழந்தைகள் காதலிக்கிறார்கள் என்றதும் ஊரையே கூட்டி எல்லாருக்கும் சொல்வது மட்டுமல்லாது அவர்கள் ஏதோ செய்யக்கூடாத தவறுகளை செய்வது போல பார்ப்பது அவர்களை தற்கொலை பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
மனநெருக்கடி அதிகரிப்பு, உறக்கம் இல்லாமல் தவித்தல், தனிமையில் உட்கார்ந்து சம்மந்தம் இல்லாமல் யோசித்தல், மன அழுத்தத்துக்கு உள்ளாகுதல் போன்றவை பதின் பருவத்தினரை தற்கொலை வரை கொண்டு செல்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. எனவே உங்கள் குழந்தைகளை பாதுகாக்க உளவியல் வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக
ஒதுக்குவது ஆபத்து
குழந்தைகள் காதலில் விழுந்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே அவர்களை குற்றவாளிகள் போல நடத்தவேண்டாம். இதுவே அவர்களை மன உளைச்சல்களுக்கு ஆளாக்கும். மாணவப் பரு வத்தில் வரும் காதலால் படிப்பு, எதிர்கால லட்சியத்தில் விழும் கேள்விக் குறிகளை பெற்றோர் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்காக அக்கம்பக்கத்து வீடுகள், உறவினர் வீடுகளுக்கு தகவல் அனுப்பி, குழந்தைகளின் காதல் ரக சியத்தை பரப்பிவிட வேண்டாம். இது அவர்களை எதிர்மறையாக சிந்தனை செய்ய வைத்து விடும்.
வெளியே அழைத்துச் செல்லுங்கள்
பதின் பருவத்தில் புத்திமதி எடுபடவில்லை எனில் சிறந்த மனோதத்துவ நிபுணரிடம் அவர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களின் நெருங்கிய நண்பர், பிடித்த உறவினர் மூலம் நல்ல விஷயங்களை எடுத்துக் கூறி புரிய வைக்கலாம். காதல் வாழ்க்கையால் எதிர்காலத்தை இழந்து தவிப்பவர்களைப் பற்றி எடுத்துக்கூறி நடைமுறை வாழ்க்கை என்ன என்பதை புரிய வைக்கலாம். அவர்கள் விரும்பும் இடங்கள், நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தலாம்.
ஆபத்தாகும் தனிமை
மகளோ-மகனோ காதலிப்பது தெரிந்துவிட்டால் கண்கொத்திப் பாம்பாக பின்தொடர்ந்து நிழல்போல் கண்காணிக்க கூடாது. எக்காரணம் கொண்டும் காதல் வயப்பட்ட தங்கள் குழந்தையை தனிமைப்படுத்தவோ, சந்தேக கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது. வழக்கமான அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் வீட்டில் தான் தனிமைப் படுத்தபடவில்லை என்கிற நம்பிக்கை அவர்களிடம் தெளிவை ஏற்படுத்திவிடும். அப்புறம் அவர்களாகவே யோசித்து நல்ல முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் எதிர்ப்பு அதிகமானால்தான் அதற்கான ஆர்வம் அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு தகுந்த ஆலோசனையும், அரவணைப்பும் இருந்தால் அவர்கள் தடம் மாறிப்போக வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
Labels:
LOVE
0
comments
Wednesday, 15 February 2012
காதலிக்க பெண்கள் தேவை தகுதிகள்
1..10th பெயிலாகிருக்கணும்(disky--நாங்கலாம் 7வது பாஸ்.
.பாஸ் தான பெருசு அதான்)
2.. அப்பன் வசதியாக இருக்கணும்(disky--வீட்டோட
... மாப்பிள்ளையா செட்டில் ஆகிடலாம்)
3..அப்பா செல்லமா இருக்கணும்(disky--செலவுக்கு
பாக்கெட்மணி கிடைக்கும்)
4..மொக்கை போட தெரியணும்(disky--நேரம் போகணும்லா)
5..பொண்ணு அழகா இருக்கணும்(disky--நாலுபேர்கிட்ட
பெருமையா சொல்லணும்லா)
6..குறைந்தது ஒரு தங்கை இருக்கணும்(disky--அட
போங்கப்பா கூச்சமா இருக்கு)
7..இருசக்கர வாகனம் இருக்ககூடாது(disky--நாங்க லிப்ட்
குடுத்தால்தான் கிக்)
8..அதிக தோழிகள் இருக்கணும்(disky--கண்ணுக்கு
குளிர்ச்சியா சைட் அடிக்கலாம்லா)
9..ஆண் நண்பர்கள் இருக்ககூடாது(disky--போட்டிலாம்
போட முடியாது)
10.பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனின் ரசிகையா இருக்கணும்
(disky--தியேட்டர்லயும் காதல் பண்ணலாம்)
சட்ட திட்டங்கள்:
1..அழகான பெண்களுக்கு முன்னுரிமை வழங்கபடும்
2..ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் கிடைக்கபெற்றால்
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கபடுவர்
3..விண்ணப்பிக்கும் அனைவருடைய பெயர்களும்
பொன்னெழுத்துகளால் கல்வெட்டில் பதிக்கபடும்
4..விண்ணப்பதாரர்களில் பேர் குலுக்கல் முறையில்
தேர்ந்தெடுக்கபட்டு உபரியாக சேர்த்துகொள்ளபடுவார்கள்
5 காதலியின் அப்பன்
பணத்தில் 5 iphone 4s மொபைல் பரிசளிக்கபடும்
6..தள்ளுபடியாகும் விண்ணப்பதாரர்களுக்கும் ஆருதல்
பரிசு வழங்கபடும்
7..தேர்ந்தெடுக்க படும் காதலிக்கு 1 வருட உத்திரவாதம்
வழங்கபடும்
8..முகநூலை போல் ஒருவர் பல பெயர்களில்
விண்ணபிக்ககூடாது மீருகிறவர்களின் விண்ணப்பம்
சுவாமி நித்யானந்தாவுக்கு forward செய்யபடும்
9..தேர்ந்தெடுக்கபட்டபின் வெளியேற நினைப்பவர்களுக்கு
ஒரே பிரசவத்தில் 16 பெண் குழந்தைகள் பிறக்கும் என
பில்லி சூனியம் வைத்து சாபம் வழங்கபடும்
10.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் dec31 2012
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நான்தான்,என் சொந்த ஊர்
என் மாவட்டம்,என் மாநிலம்
என் நாடு..என் கோடு
என் மொபைல் நம்பர்
.பாஸ் தான பெருசு அதான்)
2.. அப்பன் வசதியாக இருக்கணும்(disky--வீட்டோட
... மாப்பிள்ளையா செட்டில் ஆகிடலாம்)
3..அப்பா செல்லமா இருக்கணும்(disky--செலவுக்கு
பாக்கெட்மணி கிடைக்கும்)
4..மொக்கை போட தெரியணும்(disky--நேரம் போகணும்லா)
5..பொண்ணு அழகா இருக்கணும்(disky--நாலுபேர்கிட்ட
பெருமையா சொல்லணும்லா)
6..குறைந்தது ஒரு தங்கை இருக்கணும்(disky--அட
போங்கப்பா கூச்சமா இருக்கு)
7..இருசக்கர வாகனம் இருக்ககூடாது(disky--நாங்க லிப்ட்
குடுத்தால்தான் கிக்)
8..அதிக தோழிகள் இருக்கணும்(disky--கண்ணுக்கு
குளிர்ச்சியா சைட் அடிக்கலாம்லா)
9..ஆண் நண்பர்கள் இருக்ககூடாது(disky--போட்டிலாம்
போட முடியாது)
10.பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனின் ரசிகையா இருக்கணும்
(disky--தியேட்டர்லயும் காதல் பண்ணலாம்)
சட்ட திட்டங்கள்:
1..அழகான பெண்களுக்கு முன்னுரிமை வழங்கபடும்
2..ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் கிடைக்கபெற்றால்
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கபடுவர்
3..விண்ணப்பிக்கும் அனைவருடைய பெயர்களும்
பொன்னெழுத்துகளால் கல்வெட்டில் பதிக்கபடும்
4..விண்ணப்பதாரர்களில் பேர் குலுக்கல் முறையில்
தேர்ந்தெடுக்கபட்டு உபரியாக சேர்த்துகொள்ளபடுவார்கள்
5 காதலியின் அப்பன்
பணத்தில் 5 iphone 4s மொபைல் பரிசளிக்கபடும்
6..தள்ளுபடியாகும் விண்ணப்பதாரர்களுக்கும் ஆருதல்
பரிசு வழங்கபடும்
7..தேர்ந்தெடுக்க படும் காதலிக்கு 1 வருட உத்திரவாதம்
வழங்கபடும்
8..முகநூலை போல் ஒருவர் பல பெயர்களில்
விண்ணபிக்ககூடாது மீருகிறவர்களின் விண்ணப்பம்
சுவாமி நித்யானந்தாவுக்கு forward செய்யபடும்
9..தேர்ந்தெடுக்கபட்டபின் வெளியேற நினைப்பவர்களுக்கு
ஒரே பிரசவத்தில் 16 பெண் குழந்தைகள் பிறக்கும் என
பில்லி சூனியம் வைத்து சாபம் வழங்கபடும்
10.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் dec31 2012
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நான்தான்,என் சொந்த ஊர்
என் மாவட்டம்,என் மாநிலம்
என் நாடு..என் கோடு
என் மொபைல் நம்பர்
Labels:
LOVE
0
comments
Sunday, 5 February 2012
காதலிப்பது எப்படி?
1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து
விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால்
அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..
2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை
வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்).
முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால்
நல்லது.
3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம்.
தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.
4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட
வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது.
முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது
அவசியம்.
5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.
6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக
சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும்
திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.
7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட்
ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை
அழிக்கணும் இல்லை.
8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு
கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு
வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.
9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம்.
பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that,
Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு
இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.
10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது
வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே
வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான்
தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட்
கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க
இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும்
மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க
ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே
வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும்,
அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட
உதவும்.
11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை
மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு
சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி
போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல
கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)
12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு
விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ
தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி
வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால்
கொடுக்க கூடாது.
இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு
காதல் மன்னன்தான்...
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே.
Labels:
LOVE
0
comments
Friday, 3 February 2012
இதெல்லாம் காதல் அல்ல...
காதல் என்பது, இருவரது மனதும் புரிந்து கொண்டு, ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டு, அவருடன் வாழ்ந்தால் நமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அவர் இல்லாமல் நமது வாழ்க்கை இல்லை என்று உணர்வது. ஆனால் இப்போது நாம் ஆங்காங்கே பார்க்கும் இளம் ஜோடிகளைப் பார்த்தால் இந்த உணர்வுகளை அவர்கள் உணர்ந்திருப்பார்களா என்ற சந்தேகமேத் தோன்றும்.
வாழ்க்கையைப் பற்றிய எந்த தெளிவான கருத்தும் இல்லாமல், ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்து கொள்ளாமல், தன் பின்னால் சுற்றிய ஒரேக் காரணத்திற்காக ஒரு ஆணின் காதலை ஏற்றுக் கொள்ளும் எத்தனையோ பெண்கள் உள்ளனர். பார்க்க பளிச்சென்று இருப்பதாலும், தனது நண்பர்கள் முன்னால் அவள் என் காதலி என்று சொல்லிக் கொள்ள பெருமையாக இருக்கும் என்பதாலும், ஒரு பெண்ணை துரத்தி துரத்திக் காதலிக்கும் ஆண்களும் எத்தனையோ...
ரயில் நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலோ இது போன்று மிகச் சிறிய வயதில் காதல் கொண்டிருக்கும் காதல் ஜோடிகளைப் பார்ப்பவர்கள் முகம் சுளிப்பது மட்டும் உண்மை. அந்த வயதில் தங்களுக்கு பிள்ளைகள் இருந்தால் ஒரு நிமிடம் அவர்களை நினைத்துப் பார்க்கும் பெற்றோர்களும் ஏராளம். நம்ம பிள்ளை இப்படி இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் பெற்றவர்களை விட, நம்ம பிள்ளை எங்க சுத்திக்கிட்டிருக்கோ என்று ஏக்க பெருமூச்சு விடும் பெற்றவர்களே அதிகமாக உள்ளனர்.
பள்ளிப் படிப்பின் போதே ஆரம்பிக்கும் இவர்கள் காதல், கல்யாணப் பரிட்சை வரைக் கூட செல்வதில்லை. காதல் எனும் வகுப்பில் சேரவே தகுதியில்லாத இந்த காதலர்கள், கல்யாணப் பரிட்சையை எப்படி எழுதுவார்கள். அப்படியே எழுதினாலும் அதில் இவர்கள் தேர்ச்சி பெற முடியுமா?
தனது பிள்ளைகளுக்கு கல்வியறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக்கு அனுப்பி, பள்ளியில் மாணவர்களுடன் எந்த வகையிலும் நமது பிள்ளை தரம் தாழ்ந்து விடக் கூடாது என்பதற்காக உடை முதல் செருப்பு வரை பார்த்து பார்த்து வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் பிள்ளை ரயில் நிலையத்தில் ஒரு பையனுடன் கொஞ்சி கொஞ்சிப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டால் எப்படி இருக்கும்...
மேலும், செல்பேசிகள் இல்லாத கரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லோர் கையிலும் செல்பேசி உள்ளது. கல்லூரி மாணவர் மட்டுமல்லாமல், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடமும் தற்போது அதிக அளவில் செல்பேசிகள் உள்ளன. இது போதாதென்று பள்ளி மாணவர்களுக்கு இலவச சிம் கார்டுகளை டாக் வேல்யூவுடன் அளிக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஏராளம்.
இந்த நவீன யுகத்தில் ஒரு பெண் தலை குனிந்து நடக்கிறாள் என்றால் அதற்கு என்ன காரணம் என்று கேட்டால்... அவள் மொபைலில் எஸ்.எம்.எஸ். ப்ரீ என்று அர்த்தம் என்கிறது புதிய பழமொழி.
இவர்கள் காதல் என்று சொல்வது உண்மையில் காதலே அல்ல.. வெறும் இனக்கவர்ச்சி. தன்னிடம் சிரித்துப் பேசும், ஆணை/பெண்ணை தான் காதலிப்பதும், அவர்களும் தன்னை காதலிக்கிறார்கள் என்று எண்ணி படிப்பில் கவனம் செலுத்தாமல் வாழ்க்கையை வீணடிக்கும் மாணவர்கள் எத்தனையோ பேர்.
ரயில் நிலையத்திலும், பேருந்திலும் பார்த்து காதலித்து வாழ்க்கையை வீணடிக்காமல், வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, திறமை, வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டு, கல்யாண வயதில், தனக்கு ஏற்றவர் இவர் என்பதை உணர்ந்து கொள்ளும் காதலே நீடிக்கும். நிலைக்கும்.
அதை விட்டுவிட்டு டியூஷன் சென்டரிலும், டெலிபோன் பூத் வாசலிலும் கால் கடுக்க நின்று கொண்டிருந்தாலே அவர் தனது வாழ்க்கைக்கு ஏற்றவர் என்று எண்ணும் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் பிள்ளைகள். பிள்ளைகள் ஏமாற்றுவது பெற்றவர்களை அல்ல.. தங்களது வாழ்க்கையை.
வாழ்க்கையில் தடம்புரள எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஒரு சில வழிகளே உள்ளன. எனவே காதல் எனும் தவறான பாதையில் என்று பாதாளத்தில் வீழ்வதை விட, கல்வி, திறமை எனும் சரியான பாதையில் சென்று சிகரத்தை எட்டுவதே நல்லது.
Labels:
LOVE
0
comments
'ஓவர் செல்லம்' உங்களுக்கு ஆகாது!
புதிதாக திருமணமான ஜோரில் என்ன பேசலாம், எப்படி பேசலாம் என்பது தெரியாமல் எதையாவது உளறிக்கொட்டி முழிப்பது ஆண்களின் வழக்கம். சில விஷயங்கள் அது நன்மையை ஏற்படுத்தினாலும் பெரும்பலான விஷயங்களில் அதுவே ரிவர்ஸ்சில் திரும்பிவிடும். எனவே புதிதாக திருமணமானவர்கள் தங்கள் மனைவியிடம் என்ன பேசலாம் எப்படி பேசலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் வல்லுநர்கள்.
காதலியின் நினைப்பு ஆபத்து
புதிதாக திருமண உடன் தன்னுடைய ஹீரோயிசத்தை காட்டும் விதமாக, பழைய நினைவுகளை எல்லாம் கொட்டித் தீர்க்க வேண்டாம். பழைய காதல் நினைவுகளில் சுவையான சிரிப்பூட்டும் நிகழ்ச்சிகள் உங்களுக்கும் பழைய காதலிக்கும் இடையில் நடந்திருக்கலாம். ஆர்வக்கோளாறில் அதையெல்லாம் மனைவியிடம் அவிழ்த்து விடக்கூடாது. அப்புறம் அவங்க அதையெல்லாம் வச்சு ஆயிரக்கணக்கான கேள்வி கேட்டு குடைந்து விடுவார்கள் ஜாக்கிரதை.
ஆபத்தாகும் பொக்கிஷங்கள்
பழைய காதலியின் நினைவுப் பொக்கிஷங்களைப் பாதுகாக்காதீர்கள். அந்தமாதிரி பொருள் ஏதாவது வீட்டிலிருந்தால் உடனே அழித்துவிடுங்கள்! புகைப்படம்,வீடியோ,சிடியிலிருந்து பல பிறந்தநாள் பரிசு வரை காலி பண்ணிடுங்க. ஏனென்றால் உங்கள் மனைவி எப்போது சி.பி.ஐ அதிகாரியா மாறுவாங்கன்னு தெரியாது.
நண்பர்களை பற்றி மூச்
நம்ம நல்ல பேர் வாங்குவதற்காக நம் நண்பர்களின் குறைகளை மனைவியிடம் சொல்லக்கூடாது. முக்கியமாக உங்களுக்கு கம்பெனி கொடுக்கும் ”குடி” நண்பர்களைப் பற்றி பேச்சே கூடாது!!
கையேந்துவது ஆபத்து
கிடைக்கும் எல்லாப் பணத்தையும் மனைவியிடம் கொடுத்துவிட்டுக் கையேந்தக்கூடாது. சம்பளம் இவ்வளவு என்று காதலிக்குத் தெரியலாம். ஆனால் மனைவி என்று வந்தபின்னர் செய்யும் எல்லா செலவுக்கும் சின்னப் பையன்போல் கணக்குச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.
எவ்வளவு நண்பர்களுக்கு, அப்பா அம்மாவுக்கு, சுற்றுலாவுக்கு, செலவழிக்கிறீர்கள் என்று விலாவரியாக சொல்ல வேண்டாம்!. புதிய உறவுகள் ஆரம்பிக்கும்போது திறந்த மனதுடன் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் சொல்வது நல்லது என்பார்கள். உண்மைதான்!! ஆனால் அதுவே பின்னாளில் பெரிய பிரச்சினை ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் ஆசை அறுபதுநாள் என்பது போல் ஆரம்பத்தில் எல்லாமே நல்லதாகத் தெரியும். பின்னாளில் பிரச்சினை என்று வரும்போது முன்னர் செய்த சிறு தவறையும் பெரிய விசயமாக்குவார்கள்.
தைரியசாலியாக காட்டிக்கொள்ளுங்கள்
உங்களுடைய பலவீனங்களை அவர்களே தெரிந்து கொள்ளட்டும். பலம் நிறைந்த மனிதனாக இருக்க முயலுங்கள். தைரியம் என்பது பயத்தை மறைத்துக்கொள்வதுன்னு சொல்லுவாங்க...எல்லா பயத்தையும் சொன்னால் பாடி ஸ்ட்ராங் பேஸ் மட்டம் வீக் என்று நினைக்க ஆரம்பித்து விடுவர். எனவே எல்லவற்றையும் சொல்லத் தேவையில்லை. தொடக்கத்தில் இருந்தே இதைக் கடைப்பிடித்தால் நீங்கள்தான் ராஜா.
உங்களை சொந்தக்காலில் நிற்பவர், நீங்களே தைரியமாக முடிவெடுப்பவர் என்று உங்களின் மனைவி எண்ணுவார்கள். அதைத்தான் அவர்கள் விரும்புவார்கள். ஆனாலும் வயதில் மூத்தவர்களின், அப்பா, அம்மாவின் ஆலோசனை உதவி எப்பொழுதும் தேவை. சிலநேரங்களில் உங்கள் கைச்செலவு, சாப்பாடு, பெட்ரோல் எல்லாமே பெற்றோர் தயவில்தான் ஓடும். ஆனால் இதைப்பற்றியெல்லாம் வாய் திறக்கக் கூடாது என்ன சரியா?
ஓவர் செல்லம் ஆகாது
வாழ்க்கையை தொடங்கும் போதே லகானை சரியாக பிடிக்க வேண்டும். ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் சரி சரி என்று தலையாட்டிவிட்டு பின்னர் திடீரென்று முரண்டு பிடித்தால்தான் வாழ்க்கையில் பிரச்சினைகள் எழும். எனவே எதற்கு சரி சொல்லுவது என்பதே முதலியே முடிவு செய்து விடுவது நல்லது. அப்புறம் பாருங்கள் வாழ்க்கை உங்களுக்கு வசப்படும்
Labels:
LOVE
0
comments
காதலில் நீங்கள் எப்படி என்பதைக் கூட உங்களுக்குப் பிடித்த கலரை வைத்து கண்டுபிடித்து விடலாமாம்.
சந்தோஷம் தரும் மஞ்சள்: மஞ்சள் நிறப் பிரியர்களின் காதல் ஆசைகள் அளவுக்கு மீறியதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது.
அதனால் இந்த நிற மனிதர்களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப் பார்கள்.
இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்துவிட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள்.
நினைத்ததை முடிக்கும் சிவப்பு: சிவப்பு வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் உணர்வில் செம ஸ்பீடா இருப்பார்களாம். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய கற்பனையில் கண்டதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பார்கள்.
இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் ஆசைப்பட்டதை அடையாமல் விட மாட்டார்கள்.
காதல் மன்னன் பிங்க்: பிங்க் நிறத்தை விரும்புபவர்கள் கணக்கற்ற காதல் கனவுகள் கொண்டவர்களாக இருப்பார்கள். தினமும் இரண்டு மூன்று பேருக்காவது அவர்கள் ரூட் விடுவார்களாம்.
காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக் கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள்.
பிங்க் நிறத்தை விரும்பும் பெண்கள் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆண்களை எளிதில் நம்பி ஏமாந்துவிட மாட்டார்கள்.
காதலில் திளைக்கும் பச்சை: பச்சையை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள்.
ஆனால் இந்த நிறத்தை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வுகள் அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள்.
புதுமையை விரும்பும் நீலநிறம்: நீல நிறத்தை விரும்பும் பெண்கள் நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். இந்த நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிக மிருக்கும். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும்.
சுயநலவாதியான பர்பிள்: பர்ப்பிள் வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடும் சுயநலவாதிகள்.
கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனியாகப் பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் டன் கணக்கில் கொட்டுவார்கள். அதைக் கேட்டு அதிர்ந்து போகும் பெண், அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும்.
தத்துவம் பேசும் ஆரஞ்ச்: ஆரஞ்ச் வர்ண பார்டிகளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். காதல் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. யாராவது காதல் தூதுவிட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள்.
அதற்கு போய் யாராவது நேரத்தை செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள்.
மன அழுத்தம் தரும் கறுப்பு: கறுப்பு நிறத்தை விரும்புபவர்கள் யாரிடமும் மனம்விட்டுப் பேச மாட்டார்கள். இறுக்கமான மனிதர்களாக இருப்பதால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும்.
காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது. மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. அதை தீர்க்க சரியான மருந்து தாம்பத்ய உறவு கொள்வதுதான் என்று நம்புவதால் விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள்.
காதலை வெறுக்கும் வெள்ளை: வெள்ளை நிறத்தை விரும்புபவர்கள் காதலாவது கத்தரிக்காயாவது என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள்.
காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். இதனை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
Labels:
LOVE
0
comments
Sunday, 29 January 2012
மனசுக்குள் மணியடிக்குதா?
காதல்’ இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே மனசுக்குள் மழைபெய்யும். காதலை அனுபவித்து உணர்ந்தவர்களுக்குத்தான் அதன் உன்னதம் தெரியும். காதலிக்கத் தொடங்கியவுடன் உலகமே அழகானது போல தோன்றும்.
சாமன்ய மனிதன் கூட காதலில் விழுந்தவுடன் சரித்திர நாயகனைப் போல உணரத் தொடங்குவான். இத்தகைய மாற்றங்களை காதல் என்ற ஒற்றைச் சொல் மாற்றிவிடுகிறது. அது எங்கு எவ்விதம் ஏற்படுகிறது? என்பதை விளக்குகின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
எங்கே எவ்விதம் தோன்றும்
“ நேற்றுவரை எதுவும் இல்லை. புயலென என் நெஞ்சில் நுழைந்தாய் இன்றுமுதல் நான் நானாய் இல்லை” என்பர் காதல் வயப்பட்டவர்கள். அருகருகே இருந்த போதும் கூட காதலை உணரமுடியாது. ஆனால் சின்ன பிரிவுதான் அந்த காதலை உணர்த்தும். எனக்குரியவளை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்பதை மனம் எந்த சூழலில் உணரத் தொடங்குகிறதோ அப்பொதுதே நீங்கள் காதல் வயப்பட்டுவிட்டீர்கள் என்பதை உணரலாம்.
ஆயிரம் பார்வையிலே
நம் நேசத்திற்குரியவர் நம்முடைய நேசத்தை புரிந்து கொண்டுள்ளாரா என்பதை எப்படி உணர்ந்து கொள்வது என்பதில் குழப்பம் ஏற்படலாம். கவலை வேண்டாம். ஆயிரக்கணக்கானோர் திரண்டிருக்கும் கூட்டத்திலும், உங்களுக்கானவர் அங்கு இருந்தார் என்றால் அவரை தனியாக இனம் கண்டு கொள்ளலாம். அந்த பார்வை நிச்சயம் உங்களை வந்தடையும். அதனால்தான் கவிஞர்கள் “ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்” என்று பாடி வைத்துள்ளனர்.
காதல் தன்னம்பிக்கை
காதல் என்பது முட்டாள்தனமானது என்பர் அதை உணராதவர். காதல் என்பது எத்தனை உன்னதமானது என்பது உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். சாமன்ய மனிதரையும் சாதிக்கத் தூண்டுவது காதல். காதலை வெளிப்படுத்தும் முறையிலேயே நாம் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். நாம் நேசிக்கும் நபரிடம் நம் உணர்வை வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றுவிட்டால் போதும் அந்த காதல் நிச்சயம் வெற்றிபெறும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
காதலுக்கு நட்பு அவசியம்
காதலை வெளிப்படுத்தும் முன் உங்களவரின் நட்பு வட்டத்தை உங்கள் வசமாக்குங்கள். அது மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும். அதே சமயத்தில் உங்கள் காதலை வெளிப்படுத்த யாரையும் தூது போக சொல்லாதீர்கள். வெற்றியோ, தோல்வியோ, ஆமோதிப்போ, அவமானமோ எதையும் நீங்களே ஏற்றுக்கொள்வது காதல் பாடத்தில் முதல் அனுபவம்.
நீங்கள் நீங்களாக இருங்கள்
ஹீரோயிசத்தை வெளிப்படுத்துகிறேன் பேர்வழி என்று எந்த சந்தர்ப்பத்திலும் ஓவர் ஆக்ட் செய்யவேண்டாம். அதுவே தவறாகிவிடும். எனவே எந்த சூழ்நிலையிலும் நீங்கள் நீங்களாவே இருங்கள் அதுவே உங்களவருக்கு உங்களை பிடிக்கக் காரணமாகிவிடும். அப்புறம் என்ன காதல் டூயட் பாடவேண்டியதுதானே.
புன்னகை உதடுகள்
எந்த சூழ்நிலையிலும் மாறாத புன்னகையுடன் இருங்கள் அதுதான் உங்களவருக்கு பிடிக்கும். சிடுமூஞ்சித்தனமான ஆசாமிகளை யாரும் விரும்புவதில்லை. காதலித்தாலும் நட்புச்சூழலில் இருங்கள். உனக்கு நானிருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லுங்கள். அதுவே உங்களவருக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசு.
இதயப் பூர்வமான நம்பிக்கை
காதலுக்கு ஓகே சொல்லியாகிவிட்டதே அப்புறம் என்ன டேட்டிங் போகலாமா என்று கேட்டு அதிர்ச்சியடைய வைக்காதீர்கள். அது மிகப்பெரிய தோல்விக்கு வித்திடும். எனவே முதலில் ஒருவரை ஒருவர் உணர்வு ரீதியாக இதயப் பூர்வமாக புரிந்து கொள்ளுங்கள். பிறகுபாருங்கள் உங்களவரின் இதயத்தில் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்.
Labels:
LOVE
0
comments
Saturday, 14 January 2012
காதலில் ஆறு வகை இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது?
காதல் என்பது இளமையின் வசந்தகாலம். மனம் கவர்ந்தவரை கண்டவுடன் அவரை தக்கவைத்துக் கொள்வதற்காக எண்ணற்ற செயல்களை செய்யத் தூண்டுகின்றன ஹார்மோன்கள்.
காதலிப்பவர்களை கவர்வதற்காக இளமையின் வேகத்தில் எத்தனையோ சாகசங்களை செய்பவர்கள் ஏராளம். மனதிற்குள் பூக்கள் பூத்த அந்த தருணங்களை சேகரித்தாலே ஆயிரம் ஆயிரம் திரைப்படங்களுக்கும், நாவல்களுக்கு கதையாக உருவாக்கலாம்.
நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் ரொமான்டிக் செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எப்படிப்பட்டது என்பதை விவரிக்கிறார்கள்.
புரிதலும் விட்டுகொடுத்தலும்
காதல் பிறந்த உடனேயே அனைவரும் கவிஞர்களாகி விடுகின்றனர். பேப்பரும் பேனாவும் கிடைத்தாலே போதும் சரம் சரமாக கவிதைகள் ஊற்றெடுக்கும். உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் காதல் வரிகளை மட்டுமே உதடுகள் உச்சரிக்கும்.
நீங்களும் அப்படிப்பட்டவர் எனில் காதல் வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம். உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதனை மன்மதக்காதல் என்கின்றனர் ரொமான்டிக் ஆய்வாளர்கள். இந்த வகை காதலர்கள் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து ஆத்மார்த்தமான காதலர்களாக திகழ்வார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஒருவருக்கொருவர் புரிதல் தன்மையுடனும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தும் வாழ்வார்கள். இந்த காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.
பொழுது போக்கு காதல்
காதலியின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஏகப்பட்ட செயல்களை செய்து அவளை தன்வசமே வைத்திருக்கும் காதலர்கள் ஏராளமானோர் உண்டு. இத்தகைய காதல் கவன ஈர்ப்புக்காதல் என்கின்றனர்.
உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது எனவே இது முழுமையான காதல் அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள் நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள்.
அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கின்றனர் அவர்கள்.
வாழ்க்கை முழுதும் தொடரும்
காதலியின் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவள் மீது உள்ள அக்கறையினால் எண்ணற்ற செயல்களை செய்து அவளின் நன்மதிப்பினை ஏராளமாக பெறும் ஆண்கள் உண்டு. கண்ணியமான பார்வையும் நேசத்தை வெளிப்படுத்த சரியான தருணத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் காதலை சேமிப்புக் காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள். காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்கவேண்டும் என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள்.
இருவரும் ஆழமான அன்பு வைத்திருந்தாலும் கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.
எல்லைமீறாத காதல்
இருவருக்கும் பரஸ்பரம் பிடித்திருக்கிறது. இருவரும் நன்றாகவே பேசிக்கொண்டாலும் எல்லைமீறாமல் செல்கிறது உங்கள் காதல். ஒருவருக்கொருவர் பிரச்சினைகளை பட்டியலிட்டாலும் முட்டிக்கொள்வதில்லை. காமத்தைப் பற்றிப் பேசினாலும் விசரம் இல்லை எனில் உங்கள் காதல் திட்டமிட்டக் காதல்.
வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.
விட்டுக்கொடுக்காத காதல்
ஒருவருக்கொருவர் சீண்டிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார்கள். எல்லை மீறல்கள் இருந்தாலும், அந்த சீண்டலை அனுமதிப்பர்.
உங்களுடைய காதல் இப்படிப்பட்டது என்றால் அதனை இனிப்பு காதல் என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும்.
அதிக உணர்ச்சியும் கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார்.
இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
உயிர் தரும் காதல்
காதலிக்கோ, காதலருக்கோ ஏதாவது ஒன்று என்றால் உடனே அக்கறையுடன் கவனிக்க கிளம்பிவிடுவார்கள். விளையாட்டுக்கு அழைத்தால் கூட லீவ் போட்டுவிட்டு உடனே காதலிப்பவர்களை உடனே பார்க்க கிளம்பிவிடுபவர்களா நீங்கள். அப்படியானால் ஆத்மார்த்தமான இந்த காதலை வெற்றிக்காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள்.
என்ன காதலர்களே நீங்களும் உங்கள் காதல் எப்படிப்பட்டது என்றும் எந்த வகையைச் சார்ந்தது என்பதை கண்டுபிடித்து கொள்ளுங்கள்.
Labels:
LOVE
0
comments
Sunday, 8 January 2012
உங்கள் காதலியிடம் காதலை இப்படி சொல்லி பாருங்கள்..!
இப்பொழுது காதலிப்பவர்கள் எல்லாம் புதுசு புதுசா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. முதல்ல தன்னோட காதலியிடமோ காதலனிடமோ காதல சொல்லுறதுக்கு கவிதை , கிப்ட் கொடுத்தது சொல்லுவாங்க. அது சரி இல்லாரும் வைரமுத்து ஆகிற முடியாது அதனால பல வித்தியாசமான யோசனைகளும் சிலர் முன் வைத்தார்கள். அந்த மாதிரி பல யோசனைகள் இணையத்தில் கிடைக்கிறது. இதுக்கும் இணையம் தாங்க பயன்படுத்து என்னபண்ணுறது ?.
இப்போ காதல் செல்போன்லையும் இணையதுளையும் ரொம்ப சாதரணமா நடக்குது. இப்பொழுது தான் இல்லோரும் கணினி பயன் படுத்த ஆரம்பிச்சுட்டாங்களே அதனால காதல் ரொம்ப சீக்கிரமே வருது அதைப்போல ரொம்ப சீக்கிரமே போயிருது .சரி காதலை எப்படி சொல்லுவது அத சொல்லுனு திட்டுறது கேக்குது ( நேர்ல தாங்க சொல்லணும் )
நம்ம தான் கணினி பொறியாளர் ஆச்சே கணினி மூலமா சொல்லுவோம் எப்படினா ?
இப்படி தாங்க
669966666669999996669999996669966669966669999666669966669966
669966666699999999699999999669966669966699669966669966669966
669966666669999999999999996669966669966996666996669966669966
669966666666699999999999966666699996666996666996669966669966
669966666666666999999996666666669966666996666996669966669966
669966666666666669999666666666669966666699669966669966669966
669966666666666666996666666666669966666669999666666999999666
என்னடா வெறும் நம்பரா இருக்கேனு பாக்கதிங்க இது தாங்க கம்ப்யூட்டர்
I LOVE YOU
.
இதை உங்க காதலன் அல்லது காதலிக்கு அனுப்புங்க நோட்பேட்ல அனுப்புங்க இல்லைன்னா முகபுத்தகதுல உங்க அவங்க STATUS ல போஸ்ட் பண்ணுங்க அப்பறம் அவங்களை CTRL+F அழுத்தி அதுல வரும் விண்டோவில் 6 அல்லது 9 என்று தட்டாசு செய்ய சொல்லுங்க அப்பறம் அதை HIGHLIGHT ALL என்பதை தேர்வு பண்ண சொல்லி பாருங்க.
இப்படி தாங்க இருக்கும்
காதலை சொன்னா அடி விழும்னு பயமா இருந்தா இந்த டெக்னிக்கை
பயன்படுத்துங்க….
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்..!
Labels:
LOVE
0
comments
love
"Kathal"
oru
kadal alai mathiri,
athil
neenthanum pola
namakku asayai
irukkum...!
neenthiya
pinbuthan,
theriyum
athu alai alla,
*TSUNAMI*
endru...!
Labels:
LOVE
0
comments
Saturday, 24 December 2011
newton vithi
பொதுவான விதி :
காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அது ஒரு பெண்ணிலிருந்து இன்னொரு பெண்ணுக்கு சில பல செலவுகளுடன் மாற்றப்பட மட்டுமே முடியும்.
... முதலாவது விதி :
வெளியிலயிருந்து காதலியோட அப்பா அல்லது அண்ணன் வந்து காதலனோட காலை உடைக்கும் வரைக்கும் காதலன் மேல காதலிக்கு இருக்குற காதலும் காதலி மேல காதலனுக்கு இருக்குற காதலும் தொடர்ந்து அப்பிடியே இருக்கும்.
.
Labels:
LOVE
1 comments
Friday, 23 December 2011
Friday, 14 October 2011
Subscribe to:
Posts (Atom)

















