Showing posts with label HEALTH. Show all posts
Showing posts with label HEALTH. Show all posts

Monday, 9 April 2012

தாய்ப்பால் கொடுங்க! தாய்க்கும் அது நல்லது!!


பிறந்த குழந்தைகளுக்கு அத்தியாவசியமான உணவு தாய்ப்பால். தாய்மையும், தாய்பாலும் பெண்களுக்கு இறைவன் அளித்த சிறப்பான வரம். அதனால்தான் வெறுமனே இருந்த மார்பில் குழந்தை பிறந்த நொடியில தாய்ப்பால் சுரக்கிறது. இதனை உடனடியாக குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நீர்மத் தங்கம்

குழந்தை பிறந்த உடன் சுரக்கும் தாய்ப்பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனை நீர்மத்தங்கம் என்று அழைக்கின்றனர். இதில் உயர்தர ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. எனவேதான் பிறந்த குழந்தைக்கு உடனே இந்த தாய்ப்பாலை கொடுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகிவிடும். இது தவிர குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, ஒவ்வாமை, டைப் 2 நீரிழிவு, உடல்பருமன் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது.

ஆரோக்கியம் அவசியம்

குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்புக்காக அந்தப் பெண் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.

சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாய் எடுத்து வந்தால்தான், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும். தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும்.

தாய்ப்பால் சுரப்பு

தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை. சில பெண்களுக்கு மார்பகம் பெரியதாக இருக்கும். ஆனால், தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறியதாக இருக்கும். அதேநேரம், தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடும்.

சில தாய்மார்களுக்கு குழந்தை பெற்றெடுத்த சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பு வெகுவாக குறைந்து விடும். இதற்கு காரணம் அவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளாததும், ஹார்மோன் சுரப்பு குறைபாடும்தான்.

தாய்க்கும் நன்மைகள்

தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம் ஆக்ஸிடோசின் சுரக்கிறது. இதனால் தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கிறது.

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு டைப் 2 நீரிழிவு, மனஅழுத்தம், மார்பகப்புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள். எனவே ஆறுமாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், சேய்க்கும் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Wednesday, 21 March 2012

அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!


அழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இருவருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆண்களின் தலைமுறையையே அஸ்தமிக்கச் செய்யும் தன்மை கொண்டுள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

பக்க விளைவு மருந்துகள்

தலைமுடி குறித்த கவலை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அதிகம் இருக்கிறது. கவலை, மன அழுத்தம், ரசாயன கலவைகொண்ட ஷாம்பு, சோப்பு பயன்படுத்துவது, மாசடைந்த சுற்றுச் சூழல் போன்றவைகளினால் இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்களின் தலைமுடி உதிர்ந்து வழுக்கைத் தலையாக மாறிவருகிறது. வழுக்கையாக இருந்தால் திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்படுமோ? பெண்ணுக்கு பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே அநேகம்பேர் தவிக்கின்றனர். முடி உதிராமல் தடுக்கவும், தலைமுடி நன்றாக வளரவும் ரசாயனக் கலவைகள் அடங்கிய எண்ணெய்களையோ, கிரீம்களையே வாங்கி உபயோகிக்கின்றனர். ஒரு சிலர் மாத்திரைகளையும் உட்கொள்கின்றனர். அழகை அதிகரிக்க அவர்கள் உபயோகிக்கும் அந்த மருந்துகளில் தான் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்பது அநேகம் பேருக்கு தெரிவதில்லை.

அமெரிக்காவிலும், பிரான்ஸ் நாட்டிலும் தலைமுடி வளர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்பட்ட புரோபேஷியா என்ற மருந்து ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.

ஹார்மோன் பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் மட்டும் 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி பல மாதங்களுக்குப்பின்னர் அவர்களை சோதனை செய்தபோது அந்த ஆண்களுக்கு ஆண்மைகுறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.

இதற்கு காரணம் புரோபேஷியாவில் உள்ள பினஸ்டிரைடு (Finasteride) என்ற பொருள் டெஸ்ட்ரோஜன் என்ற ஆண்மைச் சுரப்பினைத் தடுப்பதுதான் என்று புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் கூறியுள்ளார்.

ஆண்களுக்கு ஆபத்து

புரோபேஷியா மருந்தினை உபயோகிப்பதன் மூலம் எழுச்சி நிலை குறைதல், தாம்பத்ய உறவின் போது உற்சாகம் இழத்தல், இயலாமை உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மருந்தினை உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் அமெரிக்கா, ப்ரான்ஸ் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டின் சுகாதார உற்பத்தி பாதுகாப்பு அமைப்பின் தலைவரான டொமினிக் மாரஞ்சி கூறியதாவது, புரோபேஷியா மருந்தின் அளவைக் குறைத்துப் பயன்படுத்தலாம், அவ்வாறு நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் 3 சதவீதம் தான் இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

நம் ஊரிலும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிராமல் தடுக்கவும் இந்த எண்ணெயை பூசுங்கள், இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என தினசரி விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே எந்த மருந்தில் என்ன பக்கவிளைவு உள்ளது என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையெனில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tuesday, 20 March 2012

நித்திரைக் குளிசை குடிக்கும் குண்டானவர்களுக்கு புதிய ஆப்பு! விஞ்ஞானிகள் அதிரடி


அதிக எடை உள்ளவர்கள் தொடர்ச்சியாக நித்திரைக் குளிசை குடித்தால் அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆய்வாளர்களே இந்த அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

40000 பேரை வைத்து நடாத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பொதுவாகவே அதிக எடை உள்ளவர்கள் எளிதாக நோய்த் தாக்கத்துக்கு உள்ளாவது வழக்கம்.

அப்படியானவர்களின் உடலில் கொழுப்பு அதிகம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் போன்றவை தொடர்ச்சியாக தாக்கும்.

இப்படியான நேரத்தில் நித்திரைக் குளிசையையும் குடிப்பது மேலும் சிக்கலை உண்டாக்கும்.

ஒரு வருடத்துக்கு பதினெட்டு அல்லது அதற்கு மேற்பட்ட நித்திரைக் குளிசைகள் உட்கொண்டால் இறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகக் காணப்படும்.

பெண்களை விட இரண்டு மடங்கு கூடுதலாக ஆண்களுக்கே இந்தப் பாதிப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday, 19 March 2012

சுருட்டை முடியா? அழகா பராமரிக்கலாம்!


சுருட்டை முடி அனைவருக்கும் கிடைத்து விடாது. ஒரு சிலருக்குதான் இயற்கையிலேயே கருமையான சுருட்டை, சுருட்டையாக கூந்தல் அமையும். இது கூந்தலின் அடர்த்தியையும், பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டும். அடர்த்தியாகவும், அதேசமயம் கரு கருவென அமைந்த சுருட்டை முடியை பராமரிக்க அழகியல் நிபுணர்கள் கூறியுள்ள சில ஆலோசனைகளை பின்பற்றலாம்.

அடிக்கடி தலை குளிக்காதீங்க

தினசரி தலைக்கு குளிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கலாம். அது தவறானது. இயற்கையிலே தலையில் உள்ள எண்ணெய் தன்மை இழப்பிற்கு அது காரணமாகிறது. இதனால் தலைமுடி வறண்டு ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக சுருட்டை முடிக்கு அதிக எண்ணெய் தன்மை தேவை. அதிலும் தினசரி தலைக்கு குளிப்பதன் மூலம் கூந்தல் சிக்கல் ஏற்படும் அதிகமாகும். எனவே தினசரி தலைக்கு தண்ணீர் ஊற்றவேண்டாம் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

ஷாம்பு, கண்டிசனர்

சுருட்டை முடி உள்ளவர்கள் சரியான ஷாம்பு, கண்டிசனரை பயன்படுத்துவது அவசியம். நார்மலான, நேரான கூந்தல் உள்ளவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, கண்டீசனரையே பயன்படுத்து சரியாக இருக்காது என்பது அழகியல் நிபுணர்களின் அறிவுரை.

கூந்தல் சிகிச்சை

சுருட்டை கூந்தல் உடைந்து உதிர்வதை தடுக்க வாரம் ஒருமுறை அதற்கு தனியான சிகிச்சை அளிப்பது அவசியம். ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்துக்கொண்டு கூந்தலை நன்றாக விரித்து விட்டுக் கொள்ளவும். வெண்ணையை விரலில் எடுத்து கூந்தலின் வேர்கள் வரை படுமாறு தேய்த்து ஊறவைக்கவும். அரைமணிநேரம் ஊறியபின் குளிக்க கூந்தல் உடைந்து உதிர்வது குறையும்.

சீப்பில் கவனம்

சுருட்டை கூந்தல் உடையவர்கள் பெரிய பற்களை உடைய சீப்பில்தான் சீவவேண்டும். அப்பொழுதுதான் எளிதாக சிக்கல் எடுக்க முடியும். கூந்தலும் வலி இல்லாமல் சீவ முடியும். எனவே உங்களுக்கு என்று தனியாக சீப்பு வைத்துக் கொள்ளுங்கள். சுருட்டை கூந்தல் உள்ளவர்களுக்கு அதிகம் அழுக்கும், பேன் தொல்லையும் ஏற்படும் எனவே கவனமாக கையாளுங்கள்.

தலைமுடி கவனம்

தலைக்கு குளித்து விட்டு அதிகநேரம் தலையில் துண்டி கட்டியிருக்க வேண்டாம். ஏற்கனவே சுருட்டை முடி உள்ள நிலையில் அதிகநேரம் தலையில் டவல் கட்டியிருப்பது ஈரப்பதம் உறிஞ்சப் படுவதோடு கூந்தல் அதிகம் வறண்டு உதிர வாய்ப்புள்ளது.

கூந்தலை நேசியுங்கள்

யாருக்குமே கிடைக்காத வரம் உங்களுக்கு கிடைத்துள்ளது. சுருட்டை கூந்தல் உள்ளவர்கள் நமக்கு ஏன் இப்படி என்று வருந்த வேண்டாம். உங்கள் கூந்தல் அனைவரையும் கவரும் எனவே உங்கள் கூந்தலை நேசியுங்கள்.

டென்ஷன் பிரச்னைக்கு தீர்வு


*பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு வழி சொல்கிறார் பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள்.

*அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு உண்கிறீர்களா என்பதை உணவு ஆலோசகரிடம் விவாதித்து உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும்.

*டென்ஷன், மறதி, படபடப்பு, கோபம் உள்ளிட்டவை குறித்து மனநல ஆலோசகரின் உதவியுடன் பழக்க வழக்கத்தை சரி செய்யலாம். தவறான உணவு முறை, வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும்.

*அடுத்து, உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தக் குறைபாடு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம்.

*தடுக்காமல் விட்டால் மன அழுத்தமாக மாறிவிடும். அப்படி ஆகும் போது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும். வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும்.

*டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம்.

*குழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.

*இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் உள்ளிட்டவைகளை தடுக்கலாம். இந்த வயதில் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.

*மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்ற பழக்கங்களின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும்.

*தேவையற்ற விஷயங்களை மனதில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நல்ல சிந்தனைகளுக்கு மனதில் இடம் கிடைக்கும். 30 வயதுக்கு மேல் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தவும். வாக்கிங் நல்ல பலன் அளிக்கும். மது, புகைபிடித்தல் போன்ற பழக்கங்களால் டென்ஷன் குறையும் என்று நினைப்பது மூட நம்பிக்கை. இது போன்ற பழக்கங்களை கைவிடுவது அவசியம். சரியான நேரத்துக்கு தூங்கும் பழக்கம் மனஅமைதிக்கு நல்லது.

*ஆரம்பத்தில் டென்ஷன், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள் விரைவில் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். ஆஸ்துமா, இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள், நாள்பட்ட வலி ஆகியவை மனநலப் பிரச்னைகளின் தீவிரத்தை அதிகரிக்கும். உடலில் நோய்கள் குடியேறுவதற்கான சாவியே டென்ஷன் தான். டென்ஷன் என்ற சாவியை தொலைத்தால் நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ முடியும்.

Saturday, 10 March 2012

மீன் எண்ணெய் சாப்பிட்டால் மூளை இளமையாக இருக்கும்!!


தொடர்ந்து மீன் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் மனிதனின் மூளை மிகவும் இளமையாக இயங்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மீன் எண்ணெயில், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என்ற ஊட்டசத்து அதிக அளவில் உள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஒமேகா-3, மூளையை இளமையாக வைத்திருக்க உதவுவதாக கண்டறிந்துள்ளனர்.

67 வயதுள்ள சுமார் 1,500 பேரிடம் ஆய்வு நடத்தி, அவர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். ஒமேகா அமிலத்தை குறைவாக சாப்பிட்டவர்களின் மூளை சுருங்கியும், ஞாபக மறதி, மனநிலை பிறழ்வு போன்ற பாதிப்புக்கும் ஆளாகி இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே ஒமேகா அமிலம் நிறைந்த மீன்களையும், மீன் எண்ணெயையும் சாப்பிட்டால் மூளை இளமையாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Saturday, 11 February 2012

மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!`

முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுக்கு வாரம் 3 நாட்களுக்கு மீன் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை குறித்து பின்னர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மீன் உணவு உட்கொண்டவர்களுக்கு இதயநோய் பாதிப்பு குறைந்தது தெரியவந்தது.

ஒமேகா கொழுப்பு அமிலம்

மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்தநாளங்களில் படிவதை தடுக்கிறது.

இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வயதான பெண்களுக்கு

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது.

இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது.

ஓவனில் பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது எனவும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Friday, 10 February 2012

இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு?

லேப் டாப் களில் வை–பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லேப்டாப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

மடிக் கணினியால் பாதிப்பு

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், லேப் டாப், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அபரிமித வளர்ச்சியடைந்துள்ளது.

எங்கும், எப்போதும் உபயோகிக்கலாம் என்பதால் லேப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மடிக்கணினி என்ற பெயருக்கு ஏற்ப இதனை ஏராளமானோர் மடியில் வைத்தே உபயோகிக்கின்றனர்.

இவ்வாறு லேப்டாப்களை மடியில் வைத்து உபயோகிப்பது ஆண்களுக்கு எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே மடிக்கணினிகளை உபயோகிக்கும் போது வை-பை இணையதளத்தையும் வைத்து உபயோகிக்கின்றனர்.இதனால் எழும் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்காந்த கதிர்வீச்சு

இது குறித்து 29 ஆண்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். ப்போது வை-பை இல்லாமல் மடிக்கணினியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது அவர்களின் விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்தது.

அதேசமயம் லேப் டாப்பில் வை-பையை இணைத்து உபயோகித்தபோதே அவர்களின் விந்தணு மோசமாக பாதிக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்தது.

இதற்குக் காரணம் வை-பையில் இருந்து எழும் மின்காந்த கதிர்வீச்சுதான் என்று தெரியவந்தது. இந்த கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியம் குறைவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அக்கறை அவசியம்

எனவே வை-பை இணைப்போடு லேப் டாப் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவதால் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அந்த ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் செல்போன் மற்றும் டேப்லெட் வழியாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லேப்டாப்களில் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஏற்கனவே ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 3 February 2012

HEALTH TIPS


உடல்நலக் குறிப்புகள்

* கையில் மருதாணி நிலைத்து நிற்க...

மருதாணியைப் பூசிய பிறகு மறுநாள் விரல்களில் இருந்து அதை நீக்கி விட்டு, மறுபடியும் விரலில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்து மீண்டும் அதில் மருதாணியைப் பூச வேண்டும்.

* முகத்தில் அல்லது உடம்பில் கருமையாக தேமல் படர்ந்தால் மருதோன்றி இலையை அரைத்து வைத்துக் கொண்டு, அதனுடன் சின்னத்துண்டு சவுக்காரம் சேர்த்துப் பிசைந்து தொடர்ந்து பூசிக் கொண்டு வந்தால் கறுந்தேமல் நிறம் மாறி விடும்.

* உடம்பில் பருமன் ஏற முக்கிய காரணம் இரவுச்சாப்பாடு தான். இரவுச் சாப்பாட்டை லேசாக்கி கொள்ளுங்கள். அல்லது விலக்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்மாக உடல் எடை குறைந்து வருவீர்கள்.

* உங்கள் கை நகம் பார்க்கச் சிறிதாவும், விகாரமாகவும் இருந்தால் மூன்று நான்கு நாள் அவற்றின் மீது ஸ்பிரிட் பூசி வரவும், அவை அழகாகவும் பெரிதாகவும் வளரும்.

மருத்துவக் குறிப்புகள்

* எலுமிச்சம் பழத்தோலைக் காயவைத்து இடித்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளணும். தினசரி அப்பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்து பல்துலக்கி வரணும். பல் பளபளவென்று ஆவதோடு வாய் நாற்றமும் நீங்கி விடும்.

* சுக்கையும், கல் உப்பையும் சம அளவு பொடி செய்து காலை இரவு உணவோடு கலந்து கொண்டால் வாந்தி, சோர்வு, ஆகியவை நீங்கும். நல்ல பசி உண்டாகும்.

* தினசரி உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு தினமும் பச்சை வெங்காயத்தை கொடுத்து வந்தால் ஜலதோஷம், காய்ச்சல் வராது.

Thursday, 26 January 2012

ஆரோக்கியமாக வாழ...



* தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.

* தினமும் நன்றாக தூங்குங்கள்.

* உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.

* முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்; அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.

* தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும்.

* குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.

* படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.

* முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.

* கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.

* உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.

* அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.

* இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

* கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.

* தினமும் காலையில் டீயோ, காபியோ குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.

* தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

சூடா “டீ” குடிப்பவரா நீங்கள்? – அபாயம்


சூடா “டீ” (Tea) குடிப்பதால் வயிற்றில் “கேன்சர்” (Cancer) வரும் அபாயம் உள்ளது என்று இந்திய நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வின் முடிவில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:
வாய் முதல் இரப்பை வரை உள்ள குழாய் மிக மிக மிருதுவானது. குறிப்பிட்ட அளவில்தான் அக்குழாய் சூட்டைத் தாங்கும். அதிக சூடாக அருந்தினால், அதன் சுவர் அரிக்க துவங்கிவிடும். அதிக சூட்டுடன் “டீ” குடிப்பதால் அதன் சுவர்கள் வெகுவாக பாதிக்க்ப்படுகின்றன.

அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, அதன் திசுக்கள் பலவீனப்படுகின்றன. இதனால் சுவர் பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி அபாயம் உள்ளது.
பான்பராக், புகையிலை போடுபவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு 1.1 மடங்கும், பீடி பிடிப்பவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு 1.8 மடங்கும், சிகரட் பிடிப்பவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு 2 மடங்கும், மது அருந்துபவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு 1.8 மடங்கும் உள்ளது.
ஆனால் அதிக சூட்டுடன் “டீ” குடிப்பவர்களுக்கு இவர்களை விட கேன்சர் வரும் வாய்ப்பு 4 மடங்கு அதிகமாக உள்ளது.

அதிக சூட்டுடன் “டீ” குடித்தால்தான் கேன்சர் வரும். ஆனால் அதிக சூட்டுடன் “காஃபி” (Coffee) குடிப்பதால் கேன்சர் வாய்ப்பு அதிகரித்ததே இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சூடா “டீ” குடிப்பவரா நீங்கள்? உடனே நிறுத்துங்கள்!

நீங்கள் பின் பாக்கெட்டில் மணிபர்ஸ் வைக்கும் பழக்கமுடையவரா? – ஆபத்து!




ஆண்களில் பலருக்கு இந்த பழக்கம் இருக்கும் .பேண்டின் பின் பாக்கெட்டில் மணி பர்சை வைப்பது .

இவ்வாறு பர்சை வைத்துக்கொண்டு இருக்கையில் அமர்பவர்களுக்கு நாளடைவில் முதுகுவலி வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளதாக கனடா வாட்டர்லூ பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டூவர்ட் மெக்கில் கண்டறிந்துள்ளார். இவ்வாறு அமரும்போது உடல் ஒருபக்கமாக சரிகிறது இதன் மூலமாக இடுப்பு மூட்டு நரம்பின் மீது அதிக அழுத்தம் ஏற்படுத்தப் படுகிறது.பிட்டத்தின் வழியாகச் செல்லும் இந்த நரம்பு முதுகு வலியை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணியாக உள்ளது

எனவே மணி பர்சை பயன்படுத்துபவர்கள் இருக்கைகளிலோ இருசக்கர வாகனகளில் அமரும்போது அதை பக்கவாட்டில் உள்ள பாக்கெட்டில் வைத்துவிட்டு அமருங்கள் .முதுகு வலியை வரவழைப்பதை தவிருங்கள்.

Wednesday, 25 January 2012

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.