Sunday 16 September 2012

2012 இல் அதிகம் சம்பாதித்த 30 இணையத்தளங்கள் விபரம்


1. Google
முதலாம் இடத்தில் இருப்பது Google தான்.


நிறுவுனர்கள் : Larry Page and Sergey Brin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$691.29
வருடாந்த சராசரி வருமானம் :$22,000,000,000

2. Amazon

நிறுவுனர் : Jeff Bezos
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$607.05
வருடாந்த சராசரி வருமானம் :$19,200,000,000

3. Yahoo
நிறுவுனர் : Jerry Yang and David Filo
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$228.31
வருடாந்த சராசரி வருமானம் :$7,200,000,000

4. eBay
நிறுவுனர் : Pierre Omidyar
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$199.45
வருடாந்த சராசரி வருமானம் :$ 6,300,000,000

5. Msn/Live
நிறுவுனர் : Nathan Myhvoid
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$102.00
வருடாந்த சராசரி வருமானம் :$ 3,200,000,000

6. Paypal
நிறுவுனர் : Luke Nosek, Max Levchin and Peter Thiel
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$71.40
வருடாந்த சராசரி வருமானம் :$2,250,000,000

7. iTunes
நிறுவுனர் : Jeff Robin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$60.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,900,000,000

8. Rueters
நிறுவுனர் : Marshal Vace
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$60.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,900,000,000

9. Priceline
நிறுவுனர் : Jesse Fink
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$59.6
வருடாந்த சராசரி வருமானம் :$1,850,000,000

10. Expedia
நிறுவுனர் : Added Mark Schroeder
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$46.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,450,000,000

11. NetFlix
நிறுவுனர் : Reed Hastings
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$38.00
வருடாந்த சராசரி வருமானம் :$1.100.000,000

12. Travelocity
நிறுவுனர் : Terry Jones
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$38.00
வருடாந்த சராசரி வருமானம் :$1.100.000,000

13. Zappos
நிறுவுனர் : Nick Swinmurn
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$31.70
வருடாந்த சராசரி வருமானம் :$1,000,000,000

14. Hotels.com
நிறுவுனர் : David Litman
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$31.70
வருடாந்த சராசரி வருமானம் :$1,000,000,000

15. AOL
நிறுவுனர் : Erik Prince
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$30.50
வருடாந்த சராசரி வருமானம் :$960,000,000

16. Orbitz
நிறுவுனர் : Jeff Katz
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$28.00
வருடாந்த சராசரி வருமானம் :$870,000,000

17. Overstock
நிறுவுனர் : Robert Brazell
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$27.00
வருடாந்த சராசரி வருமானம் $834,000,000

18. Myspace
நிறுவுனர் : Tom Anderson
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$25.00
வருடாந்த சராசரி வருமானம் $800.000.000

19. Skype
நிறுவுனர் : Niklas Zennstrom
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$18.00
வருடாந்த சராசரி வருமானம்: $550,840,000

20. Sohu
நிறுவுனர் : Zhang Chaoyang
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$14.00
வருடாந்த சராசரி வருமானம்: $430,000,000

21. Buy.com
நிறுவுனர் : Robb Brock
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$12.68
வருடாந்த சராசரி வருமானம்: $400,000,000

22. StubHub
நிறுவுனர் : Eric Baker
செக்கன் ஒன்றிற்கான வருமானம் : $13.00
வருடாந்த சராசரி வருமானம்: $ 430,000,000

23. Alibaba
நிறுவுனர் : Jack Ma
செக்கன் ஒன்றிற்கான வருமானம் : $10.00
வருடாந்த சராசரி வருமானம்: $315,000,000

24. Facebook
நிறுவுனர் : Mark Zuckerberg
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.50
வருடாந்த சராசரி வருமானம்: $300,000,000

25. YouTube
நிறுவுனர் : Chad Hurley, Jawed Karim and Steve Chen
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.50
வருடாந்த சராசரி வருமானம்: $300,000,000

26. Blue Nile
நிறுவுனர் : Mark Vadon
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.40
வருடாந்த சராசரி வருமானம்: $295,000,000

27. Tripadvisor
நிறுவுனர் : Stephen Kaufer
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$8.20
வருடாந்த சராசரி வருமானம்: $ 250,000,000

28. Getty Images
நிறுவுனர் : Mark Getty
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$7.40
வருடாந்த சராசரி வருமானம்: $230,000,000

29. Bidz
நிறுவுனர் : Garry Itkin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$6.70
வருடாந்த சராசரி வருமானம்: $200,000,000

30. NYTimes
நிறுவுனர் : Henry Jarvis Raymond
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$6.00
வருடாந்த சராசரி வருமானம்: $175,000,000

Thursday 13 September 2012

"இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: உலக முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது!


நியூயார்க்:இறைவனின் இறுதித் தூதரான, முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களை மிகக் கேவலமாக விமர்சிக்
கும் திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த அவதூறான திரைப்படம் லிபியாவில் முஸ்லிம்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பே அங்குள்ள அமெரிக்க தூதர் உள்பட நான்குபேரின் படுகொலைக்கு வழிவகுத்தது.

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிரான எதிர்ப்புகளும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களும் நேற்று(புதன்கிழமை) அரபு நாடுகளில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக இடம்பிடித்தன. ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைப்புகள் இத்திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளன.

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படங்களும், கார்ட்டூன்களும் உலகிற்கு புதியதல்ல. ஆனால், தற்போதைய சம்பவத்தின் பின்னணியில் கிறிஸ்தவ-யூத லாபியின் ஆதரவு இருக்கிறதா? என்பதுக் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘அல் குத்ஸ் அல் அரபி’ பத்திரிகை தனது எடிட்டோரியலில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சியோனிச லாபிதான் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் என்று ப்ரஸ் டி.வி கூறுகிறது. கலிஃபோர்னியாவில் சாம் பாசிலி என்ற யூதன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளான். இரண்டு மணிநேரம் நீண்ட இத்திரைப்படத்தை எகிப்தில் ஒரு காப்டிக் கிறிஸ்தவர் அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து யூ ட்யூப் சமூக வீடியோ இணையதளத்தில் தர ஏற்றம் செய்ததைத் தொடர்ந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. கிட்டத்தட்ட 5 மில்லியன் டாலர் செலவழித்து தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் பின்னணியில் 100க்கும் மேற்பட்ட யூத அமைப்புகள் நிதியுதவி அளித்துள்ளதாக டெய்லி மெயில் கூறுகிறது.

இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் ‘innocence of muslims’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இறைத்தூதரின் உருவம் போல் கற்பனையில் அவதூறாக உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரமும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. யூ ட்யூபில் வெளியான 13 நிமிட டிரைலரிலும் இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 2010-ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் பிரதியை எரிக்க அழைப்பு விடுத்த கிறிஸ்தவ பயங்கரவாதி டெர்ரி ஜோன்ஸின் அவதூறான கருத்துக்களை நியாயப்படுத்தும் காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

இச்சம்பவம் பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கும் வேளையிலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான யூதன் சாம் பாசிலி மீண்டும் இஸ்லாத்தை மோசமாக விமர்சித்து பேட்டியளித்துள்ளான். இஸ்லாம் ஒரு புற்றுநோய் என்று கருத்து தெரிவித்த பாசிலி தனது திரைப்படம் ஒரு அரசியல் சினிமா என்று கூறியுள்ளான். மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த அவதூறான அவமதிக்கத்தக்க தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறுகிறான். இத்திரைப்படம் ஏற்படுத்திய கொந்தளிப்பை தொடர்ந்து பாசிலி தலைமறைவாகிவிட்டான். தாக்குதலுக்கு பயந்து ரகசிய இடத்தில் பாசிலி ஒளிந்து இருப்பதாக கூறப்படுகிறது.

Saturday 1 September 2012

மூளைக்கட்டி, மலட்டுத்தன்மை, நரம்புக் கோளாறு... எல்லாம் செல்போன் டவர் செய்யும் வேலை!



டெல்லி: நகரெங்கும் சிவப்பு, காவி, வெள்ளை, பச்சை என கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த செல்போன் டவர்கள் பார்க்க சாதுவாக நின்றாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பது தெரியவந்துள்ளது. இந்த டவர்களுக்கு அருகில் வசிப்பவர்கள் கதிர் வீச்சு காரணமாக மூளையில் கட்டி, மலட்டுத் தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.

ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்வி கோட்டா இதுபற்றிக் கூறுகையில், "அதிகமாக செல்போன் உபயோகிப்பது அல்லது செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் நரம்புக் கோளாறுகள் அதிகம் வருவது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டுள்ளோம்..." என்கிறார்.

ஆனால் இந்த ஆய்வு முடிவு வரும்வரை கூட காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்கள் சிஎன்என் - ஐபிஎன்கார்கள். இந்த நிறுவனத்தின் நிருபர்கள், பேராசிரியர் கிரிஷ் குமார் உதவியுடன் ஒரு உண்மையை நிரூபித்துள்ளனர். செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு சுமார் -12 முதல் -10 டிபி வரை கதிர்வீச்சு நிலவுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். பொதுவாக -30 டிபி அளவு கதிர்வீச்சு இருக்கலாம். இந்த அளவு குறைய ஆரம்பித்தால் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஒரு செல்போன் டவருக்கு அருகில் வசித்த விஜயா பட் என்ற பெண் இப்போது மூளைக்கட்டி நோயால் அவதிப்படுகிறார். இந்த நோய் அவருக்கு வரக் காரணம் இந்த டவர்தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த மாதிரி நோயாளிகள் இப்போது மாநகரப் பகுதிகளில், குறிப்பாக செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பவர்களிடையே அதிகரித்து வருவதை பேராசிரியர் கிரிஷ் சுட்டிக் காட்டுகிறார்.

தமிழகத்தில் பல இடங்களில் வீடுகளின் கூரைகளை செல்போன் டவருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர் பலர். பணத்தைக் கொடுத்து அப்பட்டமாக மரணத்தை வாங்கும் இவர்கள் விழித்துக் கொள்ளவே மாட்டார்களா?

செல்போன் டவர்களின்(cellphone tower) கதிர்வீச்சு அளவு குறைப்பு இன்று முதல் அமல்


டெல்லி: நாடு முழுவதும் செல்போன் டவர்கள் வெளியிடுகிற கதிர்வீச்சின் அளவைக் குறைக்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய நடைமுறையின்படி, டவர்கள் வெளியிடும் கதிர்வீச்சு அளவு 10-ல் ஒரு பங்காக குறைக்கப்படும், அனைத்து வகை செல்போன்களின் உள்வாங்கும் கதிர்வீச்சு சக்தியின் அளவும் குறைக்கப்படும்.

குடியிருப்பு பகுதியில் இருந்து 35 மீட்டர் தள்ளியே செல்போன் டவர்கள் அமைக்கப்பட வேண்டும்.அனைத்து வகை செல்போன்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுகளுக்குட்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ள செல்போன்களை ஒரு ஆண்டுக்குள் திரும்பப் பெற்று கதிர்வீச்சை உள்வாங்கும் வீரியத்தைக் குறைக்க வேண்டும்,

ஐ.எம்.இ.ஐ. எண்களை புதிய அசெல்போனில் பதிவு செய்வதைபோல் கதிர்வீச்சின் அளவையும் பதிவு செய்யவேண்டும். இனி அனைத்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய கட்டுப்பாடுகளை கடைபிடித்து அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த செல்போன்களை சோதிக்க அரசு சார்பில் ஆய்வுகூடம் அமைக்கப்படும்.