Thursday, 9 August 2012
::: சாராய பூமி :::
மதுக்கடை காசிலே மாநில
வளர்ச்சியா ?
எங்கள் கோமணத்தை உருவி தான்
நீங்கள் கோட்டை கட்ட வேண்டுமா ?
நாங்கள் மயக்கதிலே கொடுத்த
காசுதான் இம்மாநிலத்தை
வளர்க்குதாம் _ எங்களை
அம்மணமாய் ஆக்கிய பின்
வெள்ளி அரனான் கயறு எதற்கு ?
வாங்கி குடித்து முடியும் வரை
வாடிக்கையாளர் என்பீர் _ அவர்கள்
குடித்து முடித்து வெளியே வந்தால்
சமூக விரோதி என்பீர்
திருத்த வேண்டிய கடமை மறந்து
ஊத்தி கொடுத்து கெடுத்து வைத்தீர் _ வெறும்
பொழுதை போக்க குடித்தவனை _ இன்று
பொழுதோரம் குடிக்க வைத்தீர்
வருமானம் பற்றாமல்
வலுவிழுந்து போனால்
விபசாரத்தையும் பொதுவாக
தத்தெடுத்து _ விலைமாதை
வரி போட்டு விற்பீரா ?
அரசே ....
பலர் ஆரோக்கியத்தை கெடுத்த
பணம் பாவம் அதை தீண்டாதே
சந்தனக்கட்டையிலே சாக்கடையை
நோண்டாதே
புகழோடு வாழ்ந்து வந்த
தமிழ் மகனை _ சாக்கடை
புழுவோடு புரள வைத்த
புண்ணியவான்களே
தன் மக்களை குடிக்க வைத்து
லாபம் பார்க்கும் அரசுக்கும்
தன் மகளை தாசியாக்கி வயறு
வளர்க்கும் அப்பனுக்கும்
என்ன வித்தியாசம் ?.
Labels:
social
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment