Thursday 21 June 2012

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் கொடூரமானது - ஆராய்ச்சி முடிவு




மனிதன் தனது வாழ்நாள் துணைவி அல்லது தோழன் இன்றி இருப்பது மிகவும் மோசமானது. இத்தகைய தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த தனிமை பாதிப்புக்கு வயது வித்தியாசம் இல்லை என்றும், அது எந்த வயதினராக இருந்தாலும் துயரத்தை கொடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.முதியோரை பொறுத்தவரை இது பொதுவான பாதிப்பு என்றாலும் அது அவர்களது வாழ்நாளை குறைத்து விடுகிறது.

10 சதவீதம் அளவிற்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி உடல்நலக்குறை, அன்றாட பணிகளில் ஈடுபட முடியாத சோர்வை நாளடைவில் எற்படுத்தி விடுகிறது என்றும் கூறுகிறார்கள்.இதேபோன்று காபி, டீ போன்ற பானங்களை உடலுக்கு நல்லது என்று ஏற்கனவே நடந்த சில ஆய்வுகள் கூறுகிறது.

இருப்பினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே, அது போல ஒரு நாளைக்கு 7 கோப்பைக்கு மேல் டீ அருந்தினால் அது புற்றுநோயை வரவழைக்கும் என்று புதிய கண்டுபிடிப்பு கூறுகிறது.

No comments: