Friday 2 March 2012

தமிழக மின்சாரதேவை பற்றாக்குறை!!


மின்சார மிகை மாநிலமாக திகழ வேண்டிய நம் மாநிலம் மின்சார பற்றாக்குறை மாநிலமாக இருப்பதற்கு காரணம் என்ன!!!!!!!!

காற்று அடிக்கும்!!!! மின்சாரம் வரும்!!!!! கூடங்குளம் திட்டம் செயல்படுத்த படும்!!!! நமது தேவை அனைத்தும் தீரும்!!!!! என்று தனக்கு தொகை எங்கு வருமோ அங்கு மட்டும் ஆர்வத்தை காட்டிய சென்ற ஆட்சியின் அலங்கோலம் தான்!!!!!!

திமுக ஆட்சி இழந்தது முக்கிய காரணமே மின்சார பிரச்சனைதான்!!!!!! ஆனால் இன்று பலர் மின்சார பிரச்னை என்பது திமுக ஆட்சி காலத்தில் இருந்ததே இல்லை என்பது போல் பேசுவது விந்தையாக உள்ளது!!!


மின்சாரம் என்று பெயர் கேட்டால் நம் நினைவுக்கு வருபவர் ஆற்காடு வீராசாமி!!!!!!!! ஆனால் மின்சார பற்றாக்குறை என்பது இப்பொழுது தான் இருக்கிறது என்று சொல்வது நம்மையே நாம் ஏமாற்றி கொள்வது!!!!!!


அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் சிந்திக்கவேண்டும்!!!!!!!!!!!!! அறுபது மாதங்கள் ஒட்டினார்கள், மின்சாரம் அவர்களது ஆட்சியை ஆட்டுவிக்கும் அளவுக்கு இருந்தது , என்ன முயற்சி செய்தார்கள் , கேட்டால் திட்டங்கள் அறிவித்தார்கள் , எட்டாயிரம் கோடிகள் செலவு செய்ய வேண்டிய திட்டத்திற்கு முப்பது கோடிகளை நான்கு ஆண்டுகளில் ஒதுக்கினார்கள்!!!!!!!


இந்த ரேஞ்சில் இவர்கள் திட்டம் ஒதுக்கினால் மின்சார உற்பத்தி தொடங்க அந்த திட்டத்திற்கு எவ்வளவு வருடங்கள் ஆகும்!!!!! இதுதான் அவர்கள் அறிவித்த திட்டங்களின் லட்சணம்!!!!!!!!!


ஏற்க்கனவே இருந்த மின் உற்பத்தி நிலையங்களை ஒழுங்காக பராமரிதார்களா!!!!!!! அதுவும் இல்லை!!!!!!!!!

எழுநூறு கோடிக்கு வாங்கவேண்டிய நிலக்கரியை ஆயிரம் கோடிகளுக்கு வாங்கி ஏறக்குறைய ஆயிரம் கோடிகள் வரை பணம் பார்த்தது தான் மிச்சம் (ஆயிரம் கோடிகள் என்பது எல்லாம் அவர்களுக்கு பாக்கெட் மனி தான் )


அவசர காலத்தில் மட்டும் விலை அதிகம் கொடுத்து வாங்க வேண்டிய மின்சாரத்தை எப்பொழுதும் ஆறு ரூபாய்க்கு தனியாரிடம் இருந்து வாங்கினார்கள் (மற்ற காலங்களில் மூன்று ரூபாய் அறுபது காசுகளுக்கு கிடைக்கும் ) கூட காசு கொடுத்தால் தானே ஒவ்வொரு உநிட்டுக்கு இவளவு என்று கம்மிசியன் பார்க்க முடியும்!!!!!!


மின்சாரம் வாங்கினார்கள்!!!!!!! ஆனால் தொகை செலுத்தினார்களா!!!!!!!!! அதுவும் இல்லை!!!!!! தனியாருக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை பதினோராயிரம் கோடிகள்!!!!!!!!!!


காற்றாலை மின்சாரம் மூன்று ரூபாய் ஐம்பது காசுக்கு கிடைக்கும் , அதனை வாங்காமல் ஆறு ரூபாய்க்கு தனியாரிடம் வாங்கிய அவலம் ,



சரி இந்த அரசு என்ன செய்கிறது!!!!!!

இது வரை நிதி ஒதுக்காத எண்ணூர் திட்டம் , உடன்குலம் திட்டம் , சரியாகாத மேட்டூர் திட்டம் போன்ற மின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளது!!!!

மற்றும் நிறைய தனியார் மின் திட்டங்களுக்கு ஊக்குவிக்கப்பட்டு ஆரம்பம் ஆகி உள்ளது!!!!!!!!!

இது வரை ஏழாயிரம் கோடிகள் ரூபாய் பத்து மாதங்களில் ஒதுக்கி உள்ளது (இது மிக பெரிய தொகை)



சோலார் திட்டத்திற்கு ஆக்கபூர்வமான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது , முதல் கட்டமாக ஓர் லட்சம் தெரு விளக்குகளை சூரிய ஒளியில் இயங்குவதற்காக தெரு விளக்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது!!!!!!!



மற்றும் புதிதாக கட்டும் பசுமை வீடுகளுக்கு முப்பதாயிரம் செலவு செய்து சோலார் திட்டம் அமல்படுத்தி வருகிறது!!!!

நமது மாநிலத்தில் ஏறக்குறைய இருபதாயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது , ஆனால் நமது தேவை பன்னிரண்டாயிரம் நமக்கு கிடைக்க மாட்டேன் என்கிறது , இதை கேட்டால் மத்திய அரசு தேசியத்தை பேசுகிறது ,

நதி நீரில் பேசாத தேசியத்தை மின்சாரத்தில் பேசுகிறார்கள்!!!!!!

கடலில் நீரை கலக்க செய்வோம் ஆனால் நதி நீர் இணைப்புக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்கிறது கேரளா அரசு!!!!!



உபரி நீரையும் , கழிவு நீரையும் தான் கொடுப்போம் என்று அடம் பிடிக்கிறது கர்நாடகம் , கேரளா , ஆந்திரா போன்ற மாநிலங்கள்!!!!

ஆனால் மின்சார பற்றாக்குறையில் நாம் தவிக்க , நம் மின்சாரத்தை பற்றி கேட்டால் தேசியம் பேசுகிறது!!!!!!!!!



குஜராத் மாநிலம் இருக்கும் கடன் தொகையை எல்லாம் நீங்கி மாநில உபரி நிதியாக ஓர் லட்சம் கோடி ரூபாய் வைத்து உள்ளது ,

மின்சார தேவை எல்லாம் முடிந்து உபரியாக ஆறாயிரம் மெகாவாட் இருக்கிறது என்று சொல்கிறது!!!!!

இன்று அணைத்து தொழிற்சாலைகளும் குஜராத் மாநிலத்தை தான் தேர்வு செய்கிறது

எவ்வாறு இது சாத்தியம்!!!!!!!!!!!!!!

தொடர்ந்து மோடி அவர்கள் குஜராத்தை ஆட்சி செய்வதால், தொய்வு இல்லாமல் அவரது திட்டங்களை அமல்படுத்த முடிகிறது!!!!

மற்றும் அந்த மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர்ந்து அமெர்க்காவில் வாழும் மக்கள் , தங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பங்கு பெற்றது முக்கிய காரணம்!!!!!

அவர்களது உதவி முக்கிய காரணம்,

நாமும் மற்ற அரசியல் வாதிகளை போல் அரசியல் பேசி கொண்டே இருக்காமல் , நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாமும் ஏதாவது செய்யலாமே!!!!!

முப்பதாயிரம் செலவு செய்தால் சோலார் மின்சாரம் கிடைக்கும் என்பது சாத்தியம் என்றால் , நாமும் அதனை நம் வீடுகளில் பொருத்தலாமே!!!!

இவ்வாறு நமது மின்தேவைகளில் சில சதவிதங்களை சோலார் திட்டங்கள் மூலம் கிடைத்தால் நாட்டிற்கு நல்லது தானே!!!!!!!!



மற்றும் பார்க்கும் நண்பர்களை குண்டு பல்புகள் பயன்படுத்தாதீர்கள் என்று அறிவுருதலாமே!!!!!!!



அரசு சோலார் திட்டத்தை பசுமை வீடுகளுக்கும் , தெரு விளக்குகளுக்கும் அமல்படுத்த போகிறது , இனி வரும் வர்த்தக கட்டிடங்களுக்கும் சோலார் திட்டம் அவசியம் என்று கூற போகிறது , இனி வரும் அடுக்கு மாடி கட்டிடங்களும் சோலார் திட்டம் அவசியம் என்று கூற போகிறது , இவ்வாறு ஒவ்வொரு வர்த்தக நிறுவனமும் தம் தேவைகளில் சிறிதளவு மின்சார தேவையை சோலார் திட்டம் கொடுத்தால் நிச்சயம் நம் மாநிலம் எவனையும் நம்பி இருக்க தேவை இல்லையே!!!!

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தி இந்தியாவின் முன்னோடி மாநிலம் என்று திகழ்ந்த நாம், இதனை செயல்படுத்தி மற்றவர்களை வியப்படைய செய்வது கஷ்டமான வேலையா!!!!!!!!

நிச்சயம் இன்னும் சில வருடங்களில் நாம் நம் மின்தேவைகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மின்சாரத்தை சோலார் திட்டங்களில் இருந்து கிடைக்கும் , அதற்க்கு பிறகு மின்சார பற்றாக்குறை என்பது வராது என்பது மட்டும் நிச்சயம்!!!!!!!!

No comments: