Sunday 5 February 2012

பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..



1.அடிப்படைல லோக்கலா இருந்தாலும், எங்கள பார்க்கும்போது, கடந்துபோகும்போது மட்டும் என்னவோ ஃபாரின்ல இருந்து அப்பதான் Flightல வந்து இறங்கின மாதிரி அலட்டல் பண்றீங்களே.. அதெப்படி உங்களால முடியுது??

2.வெளியிடங்களுக்குப் போனா நாங்களே தான் செலவு பண்ணனுமா?? நீங்க மட்டும் ஏன் பர்ஸை திறக்கவே மாட்டேன்குறீங்க?

3.எப்பவும் நாங்க தான் உங்களுக்கு ரீசார்ஜ் பண்ணி விட்றோம். இருந்தாலும் ஏன் மிஸ்டு கால் குடுத்தே உயிர வாங்குறீங்க?
4.நாங்க சைட் அடிச்சா எங்கள உண்டு இல்லைனு ஆக்கிட்றீங்க.. நீங்க சைட் அடிச்சா ”ஜஸ்ட் லுக்கிங்“னு சொல்றீங்க. இது என்ன நியாயம்?

5.நீங்க கேள்வி கேட்டா பொசசிவ்“னு சொல்றீங்க.. நாங்க கேள்வி கேட்டா மட்டும் சந்தேகப்பட்றோம்னு கத்துறீங்க.. அது ஏன்?

6.சண்டை வந்துட்டா நாங்களே தான் இறங்கி வந்து சமாதானப் படுத்தணுமா?? ஒரு தடவையாவது நீங்க சமாதானப்படுத்தினால் தான் என்ன?

7.உங்களுக்கு ஏதாவது வேலையிருந்தா அப்புறம் பேசுறன்“னு கட் பண்றீங்க. அதையே நாங்க செஞ்சா கோவப்பட்றீங்க.. ஏன்?

8.நாங்க வாங்கி குடுக்குற கிஃப்ட் மட்டும் பெருசா விலை உயர்ந்ததா இருக்கணும்.. உங்க கிஃப்ட் எப்பவுமே கீ-செயின், க்ரீட்டிங் கார்டோட முடிஞ்சுடுதே.. அது ஏன்?

9.போன் பேசும்போது நீங்களா கட் பண்ணலாம். ஆனா நாங்க கட் பண்ணினா மட்டும் “என்கூட பேச பிடிக்கலையா“னு கேட்டு சாவடிக்கிறீங்க.. ஏன்?

10.எப்ப பார்த்தாலும் உங்களுக்கு பாடிகார்ட் வேலை பாக்குறதே எங்களுக்கு பொழப்பாய்டுச்சு. நீங்க எங்க போனாலும் கூடவே வரணும்னு எதிர்பார்க்குறீங்க. எங்களுக்கும் வேலை வெட்டி இருக்குனு யோசிக்கவே மாட்டீங்களா?

11.நீ இன்னைக்கு அழகா இருக்க, உன் டிரெஸ் நல்லாயிருக்கு, உன் சிரிப்பு அழகாயிருக்கு“னு மாறி மாறி நாங்க பொய் சொன்னாலும் அது பொய்னு தெரிஞ்சும் “கெக்கே பெக்கேனு” சிரிச்சுகிட்டே இருக்கீங்களே.. அது ஏன்?

12.உங்களுக்காக மணிக்கணக்கா நாங்க காத்திருக்கலாம்.. காத்திருக்குறதுல சுகம்“னு டைலாக் விட்டு மாளிச்சுக்குறோம். ஆனா ஒரு அஞ்சு நிமிசம் நாங்க லேட்டா வந்துட்டா உடனே மூஞ்சிய தூக்கி வச்சுக்குட்டு பழிவாங்குறீங்களே.. ஏங்க?

13.அவனவனுக்கு ஆயிரம் வேலையிருக்கும்போது ஒரு நாய்குட்டிக்கு உடம்பு சரியில்லைனு ஓஓஓ“னு அழுது ஒப்பாரி வைக்குறீங்க.. அத கேட்டு நாங்க ஆறுதல் வேற சொல்லணும்னு எதிர்பார்க்குறீங்களே.. இது நியாயமா?

14.எதுக்கெடுத்தாலும் நாங்க உங்ககிட்ட கெஞ்சுறதும் நீங்க பிகு பண்ற மாதிரி நடிக்கிறதுமே பொழப்பாய்டுச்சு.. உங்களுக்கு போர் அடிக்கவே இல்லையா?

15.எங்ககிட்ட “வரவேணாம்னு சொன்னா வா“னு அர்த்தமாம்.. பார்க்காதே“னு சொன்னா பார்க்கணும்“னு அர்த்தமாம்.. தெரியல“னு சொன்னா ஆமா“னு அர்த்தமாம்.. இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஒரு அர்த்தம்னு நாங்க கஷ்டப்பட்டு புரிஞ்சுக்குறதுக்கு பதிலா அத நேரடியா சொல்லித் தொலைக்க வேண்டியது தானே.. அதை ஏன் செய்ய மாட்டீங்குறீங்க???

No comments: