காதல்
கடலில மூழ்கினா முத்து
காதலில் மூழ்கினா பித்து
படிப்பைக் கொஞ்சம் யோசி
குடும்பத்தைக் கொஞ்சம் நேசி
சொந்தக் காலில் முதலில் நில்லு
அப்புறம் உந்தன் காதலைச் சொல்லு
இதுக்கு மேலும் வேணாம் மல்லு
அப்புறம் எகிறிப் போகும் உன் பல்லு
வயசானா உதவிடும் கைத்தடி
வெறுப்பேத்தினா அப்புறம் அடிதடி
குடி
வெயிலுக்குக் குடிச்சா நல்லது மோரு
குடும்பத்தையே நாசமாக்குது இந்த பாரு
அரசியல்வாதி
குடிகாரன் குடிபோதையில் உளறுவான்!
அரசியல்வாதி குடிக்காமலேயே உளறுவான்!!
கைகூப்பிக் கேட்பாங்கோ ஓட்டு!
வெற்றிபெற்றா உட்ருவாங்கோ ஜூட்டு!!
No comments:
Post a Comment